Friday, May 23, 2014
Home »
» happy வீடியோவில் நடித்ததற்காக இரானிய அரசாங்கம் 6 பேரை கைது செய்துள்ளது.
happy வீடியோவில் நடித்ததற்காக இரானிய அரசாங்கம் 6 பேரை கைது செய்துள்ளது.
அண்மையில் உலகத்தை பெரும் பரவசத்தில் ஆழ்த்திய ஒரு வீடியோவில் நடித்ததற்காக இரானிய அரசாங்கம் 6 பேரை கைது செய்துள்ளது.
பர்ரல் வில்லியம்ஸ் என்னும் அமெரிக்கரின் பிரபலமான ‘’ஹப்பி’’ ( மகிழ்ச்சி) என்ற பாடலுக்கு தாமே, தமது ஊரில், சொந்தமாக நடனமாடி இவர்கள் இந்த வீடியோவை தயாரித்துள்ளனர்.
இந்த வீடியோவில் தெஹ்ரானின் தெருக்களிலும், வீட்டுக் கூரையிலும் ஆண்களும், முகத்திரையற்ற பெண்களும் ஆடுவதை காணலாம்.
இந்த வீடியோ பொதுப் புனிதத்தை சேதப்படுத்திவிட்டது என்று இரானிய போலிஸ் தலைவர் கூறியதாக இரானிய அரச செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
மகிழ்ச்சியை பரப்பியதற்காக இந்த பிள்ளைகள் கைது செய்யப்பட்டிருப்பது தனக்கு கவலையைத் தந்துள்ளதாக பர்ரல் தனது முகநூலில் எழுதியுள்ளார்.
மகிழ்ச்சி வீடியோவில் நடித்தவர்களை விடுதலை செய்யுமாறு சமூக வலைத்தளங்களில் பெருமளவிலானோர் பதிவு செய்துள்ளனர்.







0 comments:
Post a Comment