பிரியங்கா காங்கிரசை காப்பாற்ற முன்வர வேண்டும். மக்களவை தேர்தல் தோல்வி காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்ப்பு!
பிரியங்காவின் ஆளுமையும் வசீகரமும் அவருடைய பாட்டி இந்திரா காந்தியை நினவு படுத்தும் விதமாக உள்ளதால் ,அரசியலிலும் இந்திராக்காந்தியைப் போல் காங்கிரசை வெற்றிகரமான கட்சியாக வழிநடத்த முடியும் என அடிப்படை தொண்டர் முதல் பெரிய தலைவர்கள் வரை நம்புகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியிருப்பதைத் தொடர்ந்து கட்சியில் பிரியங்காவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மக்களவையில் எதிர்க் கட்சி அந்தஸ்தை பெறுவதற்குகூட அந்த கட்சி தகுதி பெறவில்லை.
கட்சியின் படுதோல்விக்கு ராகுல் காந்தியும் அவரது குழு வினருமே காரணம் என்ற குரல் காங்கிரஸில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ் டிரவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா, பிரியா தத் உள்ளிட்டோர் ராகுல் காந்தியை மறைமுகமாகத் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் பிரியங்காவை கட்சியில் முன்னிறுத்த நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.
கேரளாவைச் சேர்ந்த முன் னாள் மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
காங்கிரஸின் அடிப்படைத் தொண்டன் என்ற முறையில் பிரியங்கா காந்தி கட்சியின் முக்கியப் பொறுப்பை ஏற்று செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். சோனியா, ராகுல், பிரியங்கா மூவரும் ஒரே குழுவாகச் செயல்பட வேண்டும்.
பிரியங்கா மிகப் பெரிய போராளி. அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவரது போராட்ட குணத்தை அனைவரும் கண்கூடாகப் பார்த் தோம். அவரது பாட்டி இந்திரா காந்தியின் குணாதிசயங்களை பிரியங்காவிடம் பார்க்க முடிகிறது. அவர் நிச்சயமாக மக்களைக் கவருவார்.
மக்களவைத் தேர்தல் தோல்வி யில் ராகுல் காந்தியை மட்டும் குறைகூற முடியாது. நாங்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டோம். தோல்வியையும் குழுவாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு கூறியபோது, பிரியங்கா காந்தி பிரதான அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம். எனினும் மக்களை கவர்ந்திழுக்கும் திறன் அவருக்கு உள்ளது. அவர் தீவிர அரசியலுக்கு வந்தால் கட்சி வலுப்படும் என்று தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் மட்டுமே பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். அந்த 2 தொகுதி களில் சோனியாவும் ராகுலும் வெற்றி பெற்றுள்ளனர். நாடு முழு வதும் பிரியங்கா பிரச்சாரம் செய் திருந்தால் காங்கிரஸுக்கு கணிச மான இடங்கள் கிடைத்திருக்கக் கூடும் என்று காங்கிரஸ் தொண்டர் கள் நம்புகின்றனர்.









0 comments:
Post a Comment