அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

Sunday, May 11, 2014

சர்ச்சை எழுத்தாளர் தஸ்லிமாவுக்கு புற்று நோய்?

சர்ச்சை எழுத்தாளர் தஸ்லிமாவுக்கு புற்று நோய்?


வங்கதேசத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர், தஸ்லிமா நஸ்ரின்,கோடை விடுமுறைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.அங்கு கடுமையான பனி மற்றும் இருமலால் அவதிப்பட்ட அவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருடைய மார்பு பகுதியில் பெரிய கட்டி ஒன்று இருப்பதை கண்டு உடனே அவருக்கு கேன்சர் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு இன்று கிடைக்கும்.இதனைதொடர்ந்து தஸ்லிமா மிகுந்த சோகத்தில் உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் இணையதளத்தில் கூறுகையில், பிரியமுள்ள இந்தியர்களே, எனக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு அதனால் நான் இறந்தால், தயவு செய்து எனது பூனை மினுவை பார்த்துக் கொள்ளுங்கள். உலகிலேயே மிகச்சிறந்த பூனை அது என்று வருத்தத்துடன் அதில் கூறியுள்ளார்.

Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support