"நாட்டின் பிரதமர் பதவிக்கு பாஜக அறிவித்துள்ள நரேந்திர மோடி சிறந்த வேட்பாளர் அல்ல"பொருளாதார மேதை அமர்த்தியா சென் கருத்து
போல்பூர், மே 2 - நாட்டின் பிரதமர் பதவிக்கு பாஜக அறிவித்துள்ள நரேந்திர மோடி சிறந்த வேட்பாளர் அல்ல என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் கருத்து தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் போல்பூர் தொகுதிக்குட்பட்ட சாந்திநிகேதனில் அமர்த்தியாசென் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
பெரு வணிகர்கள் மத்தியிலும், சில பிரிவினர் மத்தியிலும் மோடி பிரபலமாக உள்ளார். இந்த காரணங்களால் மோடி எனக்கு பிடித்த வேட்பாளராக இருக்க முடியும் என்று கருதுவது தவறு. என்னை பொறுத்தவரை நாட்டின் பிரதமர் பதவிக்கு மோடி சிறந்த வேட்பாளர் அல்ல.
மதசார்பற்றவரும், முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தாத ஒருவரும்தான் பிரதமர் பதவிக்கு சிறந்த வேட்பாளராக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இந்த இரண்டு பண்புகளை உடையவர்தான் சிறந்த வேட்பாளரும் ஆவார் என்று அமர்த்தியாசென் தெரிவித்தார்.







0 comments:
Post a Comment