தங்கையை திருமணம் செய்த அண்ணன்:விவரம் தெரியவந்தபோது விவாகரத்து.
சவூதியில் உடன் பிறந்த சொந்த சகோதரியை அவரது சொந்த அண்ணனே திருமணம் செய்தது 25 ஆண்டுகளுக்குப் பின் தெரியவந்துள்ளது.சேர்ந்து வாழ்ந்த அந்த தம்பதியருக்கு 7 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது, அவர் மணந்த பெண் அவரது உடன்பிறந்த சகோதரி என்பது தெரியவந்துள்ளது. அவர் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வரும் அந்த பெண், சிறு வயதில் காணாமல் போன உடன்பிறந்த சகோதரி என்பது உறவினர் ஒருவரின் மூலம் தெரிய வந்தது.
அதை தொடர்ந்து இருவரும் மரபணு சோதனை செய்து அந்த சோதனையில் அவர்கள் இருவரும் ஒரே தாய், தந்தைக்குப் பிறந்தவர்கள் என்பது உறுதியானது.
அதிர்ச்சி அடைந்த அண்ணன் அந்த பெண்னை விவாகரத்து செய்ய மனு தாக்கல் செய்தார். இருவரையும் விசாரித்த நீதிமன்றம், அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.
சகோதரியை மணந்து குடும்பம் நடத்தியவருக்கு இஸ்லாமிய சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, தெரியாமல் நடந்த தவறுக்குத் தண்டனை வழங்க இஸ்லாமிய சட்டத்தில் இடமில்லை என்று கூறியுள்ளார்.






0 comments:
Post a Comment