உ.பி.மாநிலத்தில் 14,15 வயதுள்ள சிறுமிகள் கற்பழித்துக் கொலை.புகைப்படத்துடன் செய்தி!
உத்தரப் பிரதேச மாநிலம் பதான் பகுதியில் 14, 15 வயதையுடைய சிறுமிகள் இருவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் விரைவு நீதிமன்றம் மூலம் உடனடியாக குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர மாநில அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
சம்பவத்தில் தொடர்புடைய, இரண்டு போலீசார் உட்பட, முக்கிய குற்றவாளிகள் ஐந்து பேர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான ஐந்து பேரில், போலீசார் இருவர் தவிர, மற்ற மூன்று பேரும் சகோதரர்கள். இந்த வழக்கில், பெயர் குறிப்பிடப்படாத இருவர் உட்பட, மொத்தம் ஏழு பேர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறுமியர் கற்பழிப்பு விவகாரத்தில், அஜாக்கிரதையாக செயல்பட்டதால், போலீஸ் அதிகாரி ஒருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். மற்ற இரண்டு போலீஸ்காரர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், கொல்லப்பட்ட சிறுமியரின் உடலை பரிசோதனை செய்ததில், அவர்கள் இருவரும், கற்பழித்து கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது. இந்த கற்பழிப்பு சம்பவத்திற்கு, அரசியல் கட்சிகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன,







0 comments:
Post a Comment