இந்திய தேர்தலுக்கு பிந்தையகருத்துக் கணிப்பு-பி.ஜே.பி க்கு சாதகம்.முழு விவரம்
என்டபிள்யுஎஸ்-சி ஓட்டர் கருத்துக்கணிப்பில் பா.ஜ., கூட்டணி 289 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணி 101 தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும், மற்ற கட்சிகள் 153 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
என்டபிள்யுஎஸ்-சி ஓட்டர் கருத்துக்கணிப்பில், தமிழகத்தில் அ.தி.மு.க., 27 தொகுதிகளிலும், தி.மு.க., 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதிகளிலும், பா.ஜ., கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.என்.என்.ஐ.பி.என்., டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில், தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கு 22 முதல் 28 தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும், தி.மு.க.,வுக்கு 7 முதல் 11 தொகுதிகளும், பா.ஜ., கூட்டணிக்கு 4 முதல் 6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment