அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

Saturday, May 24, 2014

மோடி மனைவி மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க விருப்பம்

மோடி மனைவி மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க விருப்பம் !



 நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் அழைப்பு வந்தால் நிச்சயம் பங்கேற்பேன் என்று மோடியின் மனைவி யசோதாபென் கூறியுள்ளார்.

குஜராத் மாநில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், மோடி, தன்னை மனைவியாக வேட்பு மனுவில் குறிப்பிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வளவு காலம் பிரிந்து வாழ்ந்தாலும், அவர் என்னை மறக்கவில்லை என்பதே எனது மகிழ்ச்சிக்குக் காரணம்.

அவர் என்னை மனைவி என்று இதுவரை குறிப்பிட்டதில்லையே தவிர, அவர் தனது திருமணத்தை ஒரு நாளும் மறைக்கவில்லை. என்னைப் பற்றி அவர் தவறாகப் பேசியதும் கிடையாது. நானும் அவர் மீது மரியாதை வைத்துள்ளேன் என்றார்.

மேலும், நாங்கள் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. அவர் நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக குடும்பத்தை துறந்துவிட்டு எங்களை பிரிந்து சென்றுவிட்டார். ஒரு வேளை காலம் மாறினால் நாங்கள் மீண்டும் இணைவோம் என்று கூறியுள்ளார்.
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support