சீனாவில் பயங்கரம்: மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தையில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததில் 31 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் ஜிங்ஜியாங் பகுதியில் உள்ள ஒரு சந்தையில் 2 வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. அது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இதில் 31 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
மேலும் 90க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைததாக செய்திகள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பின்போது பலத்த சப்தம் எழுந்ததாகவும், அதனை தொடர்ந்து மக்கள் அச்சத்துடன் வெளியேற முற்பட்டபோது அங்கு மற்றொரு குண்டு வெடித்ததாகவும் சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் இதே பகுதிலுள்ள ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 79 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.







0 comments:
Post a Comment