அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

Thursday, May 1, 2014

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு. ஒருவர் உயிரிழப்பு.


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு. ஒருவர் உயிரிழப்பு.

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலையில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும், 6 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது. பெண் ஒருவர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என்ற விவரம் அறியப்படவில்லை. சந்தேகத்திற்கு இடமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் போலீஸ் டி.ஜி.பி., ராமானுஜம் மற்றும் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த குண்டுவெடிப்பை அடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
காலை 7. 30 மணியளவில் பெங்களூரில் இருந்து கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றதும். இந்த ரயில் 1 மணி நேரம் காலதாமதமாக வந்தது. இந்த குண்டு வெடித்தது. 9ம் பிளாட்பாமில் இந்த சம்வபவம் நிகழ்ந்துள்ளது. காயமுற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக தெரிகிறது. ரயில் பெட்டிகள் எஸ். ௪ எஸ்- 5 முழுமையாக சேதமடைந்துள்ளன.

Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support