வைகோ ஆவேசம் ! நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கு அழைப்பு!
நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் விழா புது தில்லியில் நடைபெற உள்ளது.
இந் நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் பேரிடியாகத் தாக்குகிறது. லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களின் ரத்தக் கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் ராஜபட்ச நுழைவதை எந்த விதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது. ராஜீய சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை. நாட்டுக் குடிமக்கள், இன்னொரு நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டால், உடனே அந்த நாட்டுடன் ராஜீய உறவுகளை, பாதிக்கப்பட்ட நாடு துண்டித்துக் கொள்கிறது. எனவே, சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 1998௯9-ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு பதவிப்பிரமாணம் செய்தபோது, 2004, 2009-ஆம் ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிப்பிரமாணம் செய்தபோதும் இலங்கை அதிபர் அழைக்கப்படவில்லை என்பதை, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே, பதவியேற்பு விழாவில் ராஜபட்சவை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று நரேந்திர மோடியையும், ராஜ்நாத் சிங்கையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், இருகரம் கூப்பி வேண்டுகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.







0 comments:
Post a Comment