அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

Sunday, May 11, 2014

உலகின் மிக அதிகமானோர் வாக்களித்த இந்திய ஜனநாயக தேர்தல் ! இன்று மாலை முதல் கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம்.

உலகின் மிக அதிகமானோர் வாக்களித்த இந்திய ஜனநாயக தேர்தல் ! இன்று மாலை முதல்
கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம்.

தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்பை திங்கள்கிழமை (மே 12) மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியிடலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

மக்களவைக்கு தேர்தல் தொடங்கிய நாளான கடந்த மாதம் 7ஆம் தேதி காலை 7 மணியில் இருந்து, முடிவடையும் நாளான திங்கள்கிழமை (மே 12) மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான ஹெச்.எஸ். பிரம்மா, "கடைசிக் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் ஏதேனும் சில வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தும் சூழ்நிலை எழலாம். எனவே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான வெள்ளிக்கிழமைக்கு (மே 16) முன்னதாக தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பை வெளியிடக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

பிரம்மாவின் இந்த பேட்டிக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே, தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support