பாலியல் பலாத்காரத்தில் இருந்து கற்பை காத்துத் கொள்ள போராடிய மாணவி மீது தீ வைப்பு மாணவர்கள் வெறிச்செயல், மாணவி உயிரிழப்பு
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. மத்திய பிரதேசத்தில் இந்தூர் நகரில் தன்னை பாலியல் பலாத்காரத்தில் இருந்து காத்துக் கொண்ட இளம்பெண் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் நேற்று நடந்துள்ளது.
மாணவியுடன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். மாணவி மட்டும் விட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மூன்று மாணவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். உடனே தன் மானத்தை காப்பாற்றிக் கொள்ள போராடியுள்ளார். உடனடியாக அந்த மாணவர்கள் மாணவி மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் காயம் அடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மாணவி 97 சதவீதம் எரிந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் அவர் உயிரிழந்தார்.
முன்னதாக மாணவியின் வாக்குமூலம் மருத்துவமனையில் வைத்து பதிவு செய்யப்பட்டது. மாணவி என்னை என்னுடன் படித்த மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். என்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்ததும் அவர்கள் என்னை எரித்துவிட்டனர் என்று கூறியுள்ளார். மூன்று வாலிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா என்பதை உறுதி செய்ய அவரது உடல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment