அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

Wednesday, May 7, 2014

இயற்கைக்கு மாறான உறவுக்கு வற்புறுத்துவதாக புகார் கூறிய முன்னால் உலக அழகி யுக்தாமுகி கணவருடன் சமரசம்: வழக்கை தள்ளுபடி செய்ய மனு .கலிகாலம்டா சாமி!

இயற்கைக்கு மாறான உறவுக்கு வற்புறுத்துவதாக புகார் கூறிய  முன்னால் உலக அழகி யுக்தாமுகி கணவருடன் சமரசம்: வழக்கை தள்ளுபடி செய்ய மனு .கலிகாலம்டா சாமி!


முன்னாள் உலக அழகி யுக்தா முகிக்கும், கணவர் பிரின்ஸ் டுலிக்கும் இடையே சமரச உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

முன்னாள் உலக அழகி யுக்தா முகி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தன் கணவர் பிரின்ஸ் டுலி மற்றும் பிரின்ஸ் டுலியின் தாயார், தந்தை மற்றும் சகோதரி ஆகியோருக்கு எதிராக  நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவில், பிரின்ஸ் டுலியின் பெற்றோர் தன்னை துன்புறுத்துவதாகவும், கணவர் பிரின்ஸ் டுலி தன்னை இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்கு வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

இதையடுத்து, பிரின்ஸ் டுலியும் அவரது பெற்றோரும் முன்ஜாமீன் கோரி கீழ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பிரின்ஸ் டுலியின் பெற்றோருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் பிரின்ஸ் டுலிக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் மும்பை  நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மற்றும் அவரது அவரது மனைவி (யுக்தாமுகி) ஆகிய இருவரும் தங்களுக்குள் பேசி, சமரச உடன்பாடு ஏற்பட நீதிபதி வாய்ப்பு அளித்தார்.

இதனை ஏற்று நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் வழக்கை ரத்து செய்ய கோரி  நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு கோடை விடுமுறை முடிந்ததும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று கூறி ஒத்தி வைத்தனர்.
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support