அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

Wednesday, May 21, 2014

கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இரண்டு நாள் நீதிமன்ற காவல்திகார் சிறையில் உள்ள 4ம் எண் அறையில் அடைக்கப்பட்டார்.

கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இரண்டு நாள் நீதிமன்ற காவல்திகார் சிறையில் உள்ள 4ம் எண் அறையில் அடைக்கப்பட்டார். 



பா.ஜ., மூத்த தலைவர் கட்காரி தொடர்ந்தஅவதூறு வழக்கில், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஜாமின் பத்திரத்தை செலுத்த மறுத்ததை தொடர்ந்து, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் பட்டியலை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார். இதில் பா.ஜ.,தலைவராக இருந்த நிதின் கட்காரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த கட்காரி, கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை ஏற்க கெஜ்ரிவால் மறுக்கவே, கட்காரி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கு டில்லி மெட்ரோபாலிடன் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கைகோமதி மொனகோ விசாரித்து வந்தார். இன்று நடந்த விசாரணையின் போது,ஜாமின் தொகையாக, ரூ. 10ஆயிரம் மதிப்புள்ள ஜாமின் பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை ஏற்றுக்கொள்ள கெஜ்ரிவால் மறுத்தார். நீதிபதியிடம் கெஜ்ரிவால், நான் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதாகவும், நான் தவறு ஏதும் செய்யாததால், ஜாமின் கேட்கமாட்டேன் எனவும் கூறினார்.

கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,கெஜ்ரிவால் தினசரி கோர்ட்டில் ஆஜராவார் என்றும், இதனால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும், கெஜ்ரிவால் நீதியிலிருந்து தப்பிக்க மாட்டோர் எனவும் கூறினார்.

இதற்கு நீதிபதி, உங்கள் வாதத்தை ஏற்றுக்கொள்வதாகவும், இருப்பினும் ஜாமின் பத்திரத்தை தாக்கல் செய்வதில் என்ன பிரச்னை எனவும், ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதியான நீங்கள் சாதாரண மனிதனை போல் நடந்து கொள்ளுங்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், இது அரசியல்ரீதியிலான வழக்கு என்றும், இதனால் ஜாமின் பத்திரத்தை செலுத்த மாட்டேன் என கூறினார்.

இதனையடுத்து கெஜ்ரிவால் வரும் 23ம் தேதி வரை,நீதிமன்ற காவலில்வைக்கப்பட்டார்.இதனையடுத்து கெஜ்ரிவால் திகார் சிறையில் உள்ள 4ம் எண் அறையில் அடைக்கப்பட்டார். வரும் 23ம்தேதி கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார். இந்த அவதூறு வழக்கு 23ம்தேதியன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support