இந்தியப் பிரதமராக நரேந்திர மோடிபதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார்.
அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.
அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதை ஏற்றுக் கொண்டு பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதர் பிரசாத் உறுதிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பாகிஸ்தான் பிரதமர் அதில் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன







0 comments:
Post a Comment