Tuesday, May 13, 2014
Home »
» உளுந்தூர்பேட்டையில் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தாலி கட்டிய திருநங்கைகள் புகைப்படங்களுடன்!
உளுந்தூர்பேட்டையில் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தாலி கட்டிய திருநங்கைகள் புகைப்படங்களுடன்!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தாலி கட்டிய திருநங்கைகள் விடிய, விடிய கும்மி அடித்து ஆடிப்பாடி கொண்டாடினர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு சித்திரை பெருவிழா 18 நாள் நடைபெறுவது வழக்கம்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை கோயிலில் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி மும்பை, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழகு பதுமைகளாக அலங்கரித்து வந்த திருநங்கைகள் கோயில் பூசாரியிடம் நீண்ட வரிசையில் நின்று தாலி கட்டிக்கொண்டனர். தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் கூத்தாண்டவருக்கு தேங்காய் உடைத்து சிறப்பு அபிஷேகம் செய்து பயபக்தியுடன் வழிபட்டனர். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் அரவாணிகளின் பெருமைகளை கூறி கோயில் அருகில் கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.ஏராளமான இளைஞர்கள் வந்து அவர்களுடன் சேர்ந்து ஆடிப்பாடினர்










0 comments:
Post a Comment