அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

Wednesday, May 7, 2014

கிளிண்டன் பணிப்பென் மோனிகா ரகசிய உறவு அம்பலம்!

கிளிண்டன் பணிப்பென் மோனிகா ரகசிய உறவு அம்பலம்!


அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த பணிப்பெண் மோனிகா லெவன்ஸ்கி முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுடன் கொண்டிருந்த உறவினை பற்றி பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ”வேனிட்டி ஃபேர்” என்ற பிரபல பத்திரிக்கையில் மோனிகா, கிளிண்டன் தன்னுடன் வைத்திருந்த உறவை குறித்து பிரத்யேகமாக கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கட்டுரையில், எனக்கும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனுக்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து மிகுந்த வேதனை அடைகிறேன். எனது கடந்தகாலம் குறித்த சர்ச்சைகளை கிளர்வதை விடுத்து எனது எதிர்காலத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

கடந்த காலத்தில் நடந்த அந்த சம்பவத்திற்கு ஒரு அர்த்தம் கற்பிக்க விரும்புகிறேன்.

அதனால் ஏற்படும் விளைவுகளையும் சந்திக்க தயார் என்றும் எங்களிடையே நடந்த சம்பவம் மனம் ஒத்தே நடந்தது என்றாலும் அந்த சம்பவம் வெட்டவெளிச்சத்திற்கு வந்த பிறகு நான் அடைந்த அவமானங்கள் ஏராளம்  எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிளிண்டன் சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support