This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Saturday, May 31, 2014
உ.பி.மாநிலத்தில் 14,15 வயதுள்ள சிறுமிகள் கற்பழித்துக் கொலை.(புகைப்படத்துடன் செய்தி!)
மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் பெருந்தன்மை - சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்கலை ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவு.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் பெருந்தன்மை - சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்கலை ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவு.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் கல்வித்தகுதி குறித்த செய்திகளை வெளியிட்டு சர்சைகளுக்கு வித்திட்ட பல்கலை ஊழியர்கள் ஐந்து பேரை பல்கலை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது.எதிர்கட்சிகள் அரசின் வெளிப்படை தன்மை குறித்து கேள்வியெளுப்பினர்.பிரசினகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும்,பெருந்தன்மை வெளிப்படும் விதமாகவும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்கலை ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பிறப்பித்துள்ளார்.
Saturday, May 24, 2014
பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் பங்கேற்பு செரீப் மகள் மரியம் நவாஸ் வரவேற்பு
பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் பங்கேற்பு செரீப் மகள் மரியம் நவாஸ் வரவேற்பு!
புதிய பிரதமராக நரேந்திரமோடி நாளை (26–ந் தேதி) பதவி ஏற்கிறார். அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் பங்கேற்கிறார்.
பதவி ஏற்பு விழாவில் நவாஸ் செரீப் பங்கேற்க பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பியது. தீவிரவாதிகளும், ராணுவமும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அவர் விழாவில் பங்கேற்க வேண்டும் என அவரது மகள் மரியம் நவாஸ் விருப்பம் தெரிவித்து இருந்தார்.
இந்தியாவின் மீது நல்லெண்ணம் கொண்ட அவர் நேசக்கரம் நீட்ட வேண்டும் என விரும்புகிறார். அது குறித்து டுவிட்டர் இணையதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:–
இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளும் கொரியா போன்று ஏன் பிரிவினை வாதத்தில் இருக்க வேண்டும். ஏன் எலியும், பூனையுமாக சண்டையிட்டு கொள்ள வேண்டும். மாறாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் போன்று சேர்ந்து வாழ முடியாதா?
அவ்வாறு நட்புறவுடன் சேர்ந்து வாழும் போது இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார வளர்ச்சி மேம்படும். இரு நாடுகளுக்கும் இடையேயான வேற்றுமைகள் குழி தோண்டி புதைக்கப்பட வேண்டும்.
அதன் மூலம் இருநாட்டு மக்களும் மேம்பாடு அடையும் நிலை ஏற்படும். இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக இணைந்து நோய்கள், வறுமை, கல்வி அறிவு இன்மை போன்றவற்றை எதிர்த்து போராடி வெற்றி பெற முடியாதா?
ஏன் முடியாது? அவற்றை நம்மால் வென்று காட்ட முடியும். இந்தியாவும், பாகிஸ்தானும் ஏன் பழையவைகளை பற்றி சிந்திக்க வேண்டும். விரோதம் மற்றும் பகைமையை குழி தோண்டி புதைத்து விட்டு புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டும்.
இருநாட்டு பிரதமர்களும் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து கருத்து தெரிவித்துள்ள மரியம், இதன் மூலம் இரு பிராந்தியத்திலும், அமைதி, ஸ்திரதன்மை மற்றும் பாதுகாப்பு ஏற்படும்.
மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற இருநாட்டு பிரதமர்களும் நம்பிக்கையுடன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். நேற்றைய எதிரிகள் நண்பர்களாக மாற வேண்டும். தற்போது அமைதியே எனது ‘ஹீரோ’ என்றும் தெரிவித்துள்ளார்.
மோடி மனைவி மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க விருப்பம்
மோடி மனைவி மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க விருப்பம் !
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் அழைப்பு வந்தால் நிச்சயம் பங்கேற்பேன் என்று மோடியின் மனைவி யசோதாபென் கூறியுள்ளார்.
குஜராத் மாநில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், மோடி, தன்னை மனைவியாக வேட்பு மனுவில் குறிப்பிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வளவு காலம் பிரிந்து வாழ்ந்தாலும், அவர் என்னை மறக்கவில்லை என்பதே எனது மகிழ்ச்சிக்குக் காரணம்.
அவர் என்னை மனைவி என்று இதுவரை குறிப்பிட்டதில்லையே தவிர, அவர் தனது திருமணத்தை ஒரு நாளும் மறைக்கவில்லை. என்னைப் பற்றி அவர் தவறாகப் பேசியதும் கிடையாது. நானும் அவர் மீது மரியாதை வைத்துள்ளேன் என்றார்.
மேலும், நாங்கள் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. அவர் நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக குடும்பத்தை துறந்துவிட்டு எங்களை பிரிந்து சென்றுவிட்டார். ஒரு வேளை காலம் மாறினால் நாங்கள் மீண்டும் இணைவோம் என்று கூறியுள்ளார்.
Friday, May 23, 2014
பிரியங்கா காங்கிரசை காப்பாற்ற முன்வர வேண்டும். மக்களவை தேர்தல் தோல்வி காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்ப்பு!
பிரியங்கா காங்கிரசை காப்பாற்ற முன்வர வேண்டும். மக்களவை தேர்தல் தோல்வி காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்ப்பு!
பிரியங்காவின் ஆளுமையும் வசீகரமும் அவருடைய பாட்டி இந்திரா காந்தியை நினவு படுத்தும் விதமாக உள்ளதால் ,அரசியலிலும் இந்திராக்காந்தியைப் போல் காங்கிரசை வெற்றிகரமான கட்சியாக வழிநடத்த முடியும் என அடிப்படை தொண்டர் முதல் பெரிய தலைவர்கள் வரை நம்புகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியிருப்பதைத் தொடர்ந்து கட்சியில் பிரியங்காவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மக்களவையில் எதிர்க் கட்சி அந்தஸ்தை பெறுவதற்குகூட அந்த கட்சி தகுதி பெறவில்லை.
கட்சியின் படுதோல்விக்கு ராகுல் காந்தியும் அவரது குழு வினருமே காரணம் என்ற குரல் காங்கிரஸில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ் டிரவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா, பிரியா தத் உள்ளிட்டோர் ராகுல் காந்தியை மறைமுகமாகத் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் பிரியங்காவை கட்சியில் முன்னிறுத்த நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.
கேரளாவைச் சேர்ந்த முன் னாள் மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
காங்கிரஸின் அடிப்படைத் தொண்டன் என்ற முறையில் பிரியங்கா காந்தி கட்சியின் முக்கியப் பொறுப்பை ஏற்று செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். சோனியா, ராகுல், பிரியங்கா மூவரும் ஒரே குழுவாகச் செயல்பட வேண்டும்.
பிரியங்கா மிகப் பெரிய போராளி. அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவரது போராட்ட குணத்தை அனைவரும் கண்கூடாகப் பார்த் தோம். அவரது பாட்டி இந்திரா காந்தியின் குணாதிசயங்களை பிரியங்காவிடம் பார்க்க முடிகிறது. அவர் நிச்சயமாக மக்களைக் கவருவார்.
மக்களவைத் தேர்தல் தோல்வி யில் ராகுல் காந்தியை மட்டும் குறைகூற முடியாது. நாங்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டோம். தோல்வியையும் குழுவாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு கூறியபோது, பிரியங்கா காந்தி பிரதான அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம். எனினும் மக்களை கவர்ந்திழுக்கும் திறன் அவருக்கு உள்ளது. அவர் தீவிர அரசியலுக்கு வந்தால் கட்சி வலுப்படும் என்று தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் மட்டுமே பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். அந்த 2 தொகுதி களில் சோனியாவும் ராகுலும் வெற்றி பெற்றுள்ளனர். நாடு முழு வதும் பிரியங்கா பிரச்சாரம் செய் திருந்தால் காங்கிரஸுக்கு கணிச மான இடங்கள் கிடைத்திருக்கக் கூடும் என்று காங்கிரஸ் தொண்டர் கள் நம்புகின்றனர்.
happy வீடியோவில் நடித்ததற்காக இரானிய அரசாங்கம் 6 பேரை கைது செய்துள்ளது.
அண்மையில் உலகத்தை பெரும் பரவசத்தில் ஆழ்த்திய ஒரு வீடியோவில் நடித்ததற்காக இரானிய அரசாங்கம் 6 பேரை கைது செய்துள்ளது.
பர்ரல் வில்லியம்ஸ் என்னும் அமெரிக்கரின் பிரபலமான ‘’ஹப்பி’’ ( மகிழ்ச்சி) என்ற பாடலுக்கு தாமே, தமது ஊரில், சொந்தமாக நடனமாடி இவர்கள் இந்த வீடியோவை தயாரித்துள்ளனர்.
இந்த வீடியோவில் தெஹ்ரானின் தெருக்களிலும், வீட்டுக் கூரையிலும் ஆண்களும், முகத்திரையற்ற பெண்களும் ஆடுவதை காணலாம்.
இந்த வீடியோ பொதுப் புனிதத்தை சேதப்படுத்திவிட்டது என்று இரானிய போலிஸ் தலைவர் கூறியதாக இரானிய அரச செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
மகிழ்ச்சியை பரப்பியதற்காக இந்த பிள்ளைகள் கைது செய்யப்பட்டிருப்பது தனக்கு கவலையைத் தந்துள்ளதாக பர்ரல் தனது முகநூலில் எழுதியுள்ளார்.
மகிழ்ச்சி வீடியோவில் நடித்தவர்களை விடுதலை செய்யுமாறு சமூக வலைத்தளங்களில் பெருமளவிலானோர் பதிவு செய்துள்ளனர்.
Thursday, May 22, 2014
சீனாவில் பயங்கரம்: மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தையில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததில் 31 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் பயங்கரம்: மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தையில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததில் 31 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் ஜிங்ஜியாங் பகுதியில் உள்ள ஒரு சந்தையில் 2 வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. அது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இதில் 31 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
மேலும் 90க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைததாக செய்திகள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பின்போது பலத்த சப்தம் எழுந்ததாகவும், அதனை தொடர்ந்து மக்கள் அச்சத்துடன் வெளியேற முற்பட்டபோது அங்கு மற்றொரு குண்டு வெடித்ததாகவும் சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் இதே பகுதிலுள்ள ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 79 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, May 21, 2014
வைகோ ஆவேசம் ! நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கு அழைப்பு!
வைகோ ஆவேசம் ! நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கு அழைப்பு!
நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் விழா புது தில்லியில் நடைபெற உள்ளது.
இந் நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் பேரிடியாகத் தாக்குகிறது. லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களின் ரத்தக் கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் ராஜபட்ச நுழைவதை எந்த விதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது. ராஜீய சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை. நாட்டுக் குடிமக்கள், இன்னொரு நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டால், உடனே அந்த நாட்டுடன் ராஜீய உறவுகளை, பாதிக்கப்பட்ட நாடு துண்டித்துக் கொள்கிறது. எனவே, சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 1998௯9-ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு பதவிப்பிரமாணம் செய்தபோது, 2004, 2009-ஆம் ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிப்பிரமாணம் செய்தபோதும் இலங்கை அதிபர் அழைக்கப்படவில்லை என்பதை, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே, பதவியேற்பு விழாவில் ராஜபட்சவை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று நரேந்திர மோடியையும், ராஜ்நாத் சிங்கையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், இருகரம் கூப்பி வேண்டுகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இரண்டு நாள் நீதிமன்ற காவல்திகார் சிறையில் உள்ள 4ம் எண் அறையில் அடைக்கப்பட்டார்.
கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இரண்டு நாள் நீதிமன்ற காவல்திகார் சிறையில் உள்ள 4ம் எண் அறையில் அடைக்கப்பட்டார்.
பா.ஜ., மூத்த தலைவர் கட்காரி தொடர்ந்தஅவதூறு வழக்கில், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஜாமின் பத்திரத்தை செலுத்த மறுத்ததை தொடர்ந்து, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் பட்டியலை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார். இதில் பா.ஜ.,தலைவராக இருந்த நிதின் கட்காரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த கட்காரி, கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை ஏற்க கெஜ்ரிவால் மறுக்கவே, கட்காரி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கு டில்லி மெட்ரோபாலிடன் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கைகோமதி மொனகோ விசாரித்து வந்தார். இன்று நடந்த விசாரணையின் போது,ஜாமின் தொகையாக, ரூ. 10ஆயிரம் மதிப்புள்ள ஜாமின் பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை ஏற்றுக்கொள்ள கெஜ்ரிவால் மறுத்தார். நீதிபதியிடம் கெஜ்ரிவால், நான் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதாகவும், நான் தவறு ஏதும் செய்யாததால், ஜாமின் கேட்கமாட்டேன் எனவும் கூறினார்.
கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,கெஜ்ரிவால் தினசரி கோர்ட்டில் ஆஜராவார் என்றும், இதனால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும், கெஜ்ரிவால் நீதியிலிருந்து தப்பிக்க மாட்டோர் எனவும் கூறினார்.
இதற்கு நீதிபதி, உங்கள் வாதத்தை ஏற்றுக்கொள்வதாகவும், இருப்பினும் ஜாமின் பத்திரத்தை தாக்கல் செய்வதில் என்ன பிரச்னை எனவும், ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதியான நீங்கள் சாதாரண மனிதனை போல் நடந்து கொள்ளுங்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், இது அரசியல்ரீதியிலான வழக்கு என்றும், இதனால் ஜாமின் பத்திரத்தை செலுத்த மாட்டேன் என கூறினார்.
இதனையடுத்து கெஜ்ரிவால் வரும் 23ம் தேதி வரை,நீதிமன்ற காவலில்வைக்கப்பட்டார்.இதனையடுத்து கெஜ்ரிவால் திகார் சிறையில் உள்ள 4ம் எண் அறையில் அடைக்கப்பட்டார். வரும் 23ம்தேதி கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார். இந்த அவதூறு வழக்கு 23ம்தேதியன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடிபதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார்
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடிபதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார்.
அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.
அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதை ஏற்றுக் கொண்டு பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதர் பிரசாத் உறுதிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பாகிஸ்தான் பிரதமர் அதில் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன
Friday, May 16, 2014
தமிழகம் முழுதும் நேட்டா கம்யூனிஸ்ட்களை பின்னுக்கு தள்ளியது!
தமிழகம் முழுதும் நேட்டா கம்யூனிஸ்ட்களை பின்னுக்கு தள்ளியது!
தற்போது நிலவரப்படி தமிழகம் முழுதும் கம்யூனிஸ்ட்கள் வாங்கியிருக்கும் வாக்குகள்394525.ஆனால்,நேட்டா பெற்றது 513398 வாக்குகள் .118873 வாக்குகள் கூடுதல்.
நீலகிரி தொகுதியில் நேட்டா பெற்ற 46559 வாக்குகள்! 3 வது இடம்
நீலகிரி தொகுதியில் நேட்டா பெற்ற 46559 வாக்குகள்! 3 வது இடம்
நீலகிரி தொகுதியில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கான நேட்டா பட்டனை அழுத்தி 46559 பேர் வாக்களித்து உள்ளனர்.நீலகிரி மக்கள் இத்த்னைக்கும் படிப்பறிவு குறைந்த மலைவாழ் மக்கள் நிறந்த தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியில் எப்படி இவ்வளவு பேர் அதாவது வேட்பாளர்களில் மூன்றாவது இடம் பெறுமளவிற்கு வாக்களித்துள்ளனர் என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.
பி.ஜே.பி.போட்டியிட முடியாதது ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.ஏனெனில் ,பி.ஜே.பி.க்கு வாக்களிக்க விரும்பியவர்கள் கடைசி நேரத்தில் பி.ஜெ.பி. போட்டியிடாததால் வேறு கட்சிக்கு வாக்களிக்க விரும்பாமல் நேட்டாவுக்கு வாக்களித்திருக்கலாம் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது.
"தி.மு.க, தோல்விக்கு 3 காரணங்கள்"அழகிரி
"தி.மு.க, தோல்விக்கு 3 காரணங்கள்"அழகிரி
தி.மு.க, தோல்விக்கு 3 காரணங்கள் உள்ளன. ஒன்று, தேர்தல் வியூகத்திலும், வேட்பாளர் தேர்விலும் கருணாநிதி தலையீடு இல்லாதது. அடுத்தது, கட்சியில் சர்வாதிகாரத்துடன் செயல்பட்ட தனி மனிதர் ஒருவரின் ஒன்மேன் ஷோ. மூன்றாவது, உள்கட்சி பூசல். இது குறித்து ஏற்கனவே நான் புகார் செய்தும், என் மீதும், எனது ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தனர். இவை தான், தி.மு.க., வின் தோல்விக்கு காரணம். கருணாநிதியை சிலர் பிளாக்மெயி்ல் செய்து வருகின்றனர். கருணாநிதிக்கும், தோல்விக்கும் சம்பந்தம் இல்லை. இந்த தோல்விக்கு காரணமானவர்கள் பதவி விலக வேண்டும். இவ்வாறு அழகிரி கூறினார்
தமிழ்நாடு தேர்தல் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.,தே.மு.தி.க. ,ம.தி.மு.க. படு தோல்வி
தமிழ்நாடு தேர்தல் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.,தே.மு.தி.க. ,ம.தி.மு.க. படு தோல்வி
|
Tamil Nadu Result Status
|
|||
|
Status Known For 37 out of 39 Constituencies
|
|||
|
Party
|
Won
|
Leading
|
Total
|
|
Bharatiya
Janata Party
|
0
|
1
|
1
|
|
All
India Anna Dravida Munnetra Kazhagam
|
0
|
35
|
35
|
|
Pattali
Makkal Katchi
|
0
|
1
|
1
|
|
Total
|
0
|
37
|
37
|
தமிழ்நாடு தேர்தல் அனைத்து தொகுதிகள் தற்போதைய நிலவரம் வாக்கு விவரங்களுடன்
தமிழ்நாடு தேர்தல் அனைத்து தொகுதிகள் தற்போதைய நிலவரம் வாக்கு விவரங்களுடன்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


























