அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, December 9, 2013

இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்குகிறார் அன்னா ஹசாரே

இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்குகிறார் அன்னா ஹசாரே

2012ம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே, ஜன்லோக்பால் மசோதா கொண்டு வரப்படும் என்று கூறி அரசிடம் இருந்து எனக்கு பல கடிதங்கள் வந்தன.பிறகு பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும், மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்று அடுத்தடுத்து வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. மழைக்கால கூட்டத்தொடரும் முடிந்து விட்டது. எனவேதான், வேறு வழியின்றி எனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் நாளை (இன்று) காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன். நாடாளுமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும்.  இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
Share:

Tuesday, December 3, 2013

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நிலை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி ஐந்து நாள் இலங்கை பயணம்.


இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் ஒட்டுமொத்த நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி ஐந்து நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார்.
அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ஐ நா வின் சிறப்புத் தூதார் சாலோகா பெயானி, நேரடியாகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவிருப்பதாக ஐ நா செய்திக் குறிப்பு கூறுகிறது.

மனித உரிமை, மீள்குடியேற்றம், போர்
அவ்வகையில் இடம்பெயர்ந்த மக்களையும், பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களையும் அவர் நேரடியாக சந்திக்கவுள்ளார். தமது பயணத்தின் போது அவர் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்வார் எனவும் ஐ நாவின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் காத்திரமான தீர்வுகள் குறித்து தான் கவனம் செலுத்தவுள்ளதாக பெயானி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அவர்களின் பாதுகாப்பு மற்றும் மற்றும் உதவிகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும் அவர் அங்கு விவாதிப்பார். தமது பயணத்துக்கு பிறகு தான் கண்டவை குறித்து முதற்கட்டமாக எழுத்துபூர்வமான ஒரு அறிக்கையை அவர் வெளியிடவுள்ளார்.


அவரது பயணம் குறித்த முழுமையான அறிக்கை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் சமர்பிக்கப்படும்.
இன்று தொடங்கி எதிர்வரும் ஆறாம் தேதி வரையிலான இந்தப் பயணத்தின்போது, அரச தரப்பினர், சிவில் சமூகத்தினர் மற்றும் இலங்கையிலுள்ள ஐ நாவின் உயரதிகாரிகள் ஆகியோரையும் பெயானி சந்திப்பார் என்று அவரது பயணம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.
Share:

Saturday, November 30, 2013

"இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த,இந்திய அரசு முழு முயற்சிகளும் எடுத்தது". இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்


இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த,இந்திய  அரசு முழு முயற்சிகளும் எடுத்தது. ஆனால், விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் அதற்கு ஒத்து வராததால், போரை நிறுத்த முடியாமல், இனப்படுகொலை நடந்தது,'' என, இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
'இலங்கை தமிழர் வாழ்வுரிமையும்,
இந்திய அரசின் நிலையும்' என்ற கருத்தரங்கம் சென்னையில், நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது.
இதில், சிதம்பரம் பேசியதாவது:
இலங்கை, இறையாண்மை கொண்ட ஒரு நாடு. அந்நாட்டை பிரித்து, தனிநாட்டை உருவாக்கிக் கொடுக்க முடியாது. இந்தியாவில், காஷ்மீரையும், வடகிழக்கு மாநிலங்களில், நாகா மற்றும் மிசோ நாடுகளையும் கேட்டு போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு, நாட்டை பிரித்துக் கொடுத்துவிட முடியுமா? அதுபோல் தான், இறையாண்மை கொண்ட இலங்கையைப் பிரித்து, தனிநாடு உருவாக்க முடியாது.
ஆனால், 'இலங்கை வாழ் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தர வேண்டும்' என, ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம்
உருவாக்கப்பட்டது.
இதன்படி, தமிழை, இலங்கையின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, ஒரே மாகாணத்தை உருவாக்க வேண்டும்.
அரசியல் மற்றும் பிற உரிமைகளை,
தமிழர்களுக்கு அளிக்க வேண்டும்.
இதற்கு, இலங்கையின் அரசியல் சாசன சட்டத்தில், 13வது திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும். இதையேற்று, 13வது அரசியல் அமைப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், அதை அமல் செய்ய, இலங்கை அரசு முரண்டு பிடிக்கிறது.
இதற்கிடையே, இலங்கையில், இறுதிகட்டப் போர் நடந்த, 2009ல், இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், மத்திய அரசு, வெளிநாட்டில் நடக்கும் போர் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது.
இதனால், பெரும் மன வருத்தம் தரக்கூடிய, இனப் படுகொலை நடந்தேறியது.
இதைப் பற்றி இனி பேசிப் பயனில்லை. இருக்கக் கூடிய, இலங்கைத் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டியதே நமது கடமை. இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில், இந்திய பிரதமர் பங்கேற்காமல் இருந்தது, இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் இலங்கைக்கு செல்லாமல்,
வெளியுறவு அமைச்சரை காமன்வெல்த் மாநாட்டுக்கு அனுப்பியது தான், விவேகமான செயல்.
இதன்மூலம் தான், இலங்கைப் பிரச்னையில், தொடர்ந்து தலையிட்டு, தமிழர்கள் நலனை பாதுகாக்க முடியும். நாம் முழுமையாக காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்து இருந்தால், இலங்கையுடன் தொடர்ந்து உறவு கொள்ளமுடியாது. நமக்கு, விசா கொடுக்க, இலங்கை அரசு மறுக்க முடியும்.
விரைவில் இந்திய பிரதமர், யாழ்பாணத்துக்கு செல்வார். அங்கிருக்கும் முதல்வர் விக்கேனஸ்வரனுடன் ஆலோசித்து, தமிழர்களின் நலனை மேம்படுத்துவார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும்,
13வது அரசியல் அமைப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு சர்வதேச
விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். போரில் இடம்பெயர்ந்த
தமிழர்களை மறு குடியமர்வு செய்யவேண்டும்.
இதிலிருந்து, எந்த காலகட்டத்திலும்
பின்வாங்க மாட்டோம்.
இவ்வாறு, சிதம்பரம் பேசினார்.
Share:

Monday, November 18, 2013

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும்:இலங்கைக்கு சீனா திடீர் வலியுறுத்தல்



மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று இலங்கை அரசை அதன் நட்பு நாடான சீனா திடீரென்று வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சீனா உறுப்பு நாடாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தெடுக்கப்பட்டுள்ளதால் சீனாவின் நிலைப்பாடு மாறியுள்ளதாக தெரிகிறது.

"இலங்கைப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சர்வதேச விசாரணைக்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கின் கெங் கூறியதாவது:

மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மற்ற நாடுகள் ஒருங்கிணைந்து உதவ வேண்டும்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது குறித்து அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டின்போது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச அளவில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒற்றுமையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து என்று கின் கெங் கூறினார்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கு தேவையான நவீன கட்டமைப்பு வசதிகளையும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் சீனா நிறைவேற்றி தந்தது குறிப்பிடத்தக்கது.
Share:

Friday, November 1, 2013

கல்வியை தனியாருக்கு தாரை வார்க்காதே!மருத்துவர் ராமதாசு அறிக்கை.

கல்வியை தனியாருக்கு தாரை வார்க்காதே!மருத்துவர் ராமதாசு அறிக்கை.





Share:

Friday, October 25, 2013

பேஸ்புக் அரட்டை : பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை.கலிகாலம்!

பேஸ்புக் அரட்டை : பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை.கலிகாலம்!

மஹாராஷ்டிராவில் பர்பானி என்ற இடத்தில் வசித்து வருபவர் சுனில் தஹிவால். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களில் 17 வயதாகும் மகள் ஐஸ்வர்யா கல்லூரியில் படித்து வந்தார். இவர் அடிக்கடி தன்னுடைய செல்போன் மூலமும், இணையதளத்தின் பேஸ்புக் தொடர்பு மூலமும் நண்பர்களுடன் அரட்டை அடித்து வந்துள்ளார். இதனால் மகளின் படிப்பு பாழாகுமே என அஞ்சிய பெற்றோர் அதனைக் கண்டித்துள்ளனர்.

கடந்த, புதனன்று இரவும் ஐஸ்வர்யா பேஸ்புக்கில் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்திருக்கிறார். அதனைக் கண்ட பெற்றோர் வழக்கம்போல கண்டிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா தனது அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ‘இத்தனை கட்டுப்பாடுகளுடன் தன்னால் இருக்கமுடியாது' என ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஐஸ்வர்யாவின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டர். இது குறித்து பர்பானி பகுதியில் உள்ள நனல்பெத் காவல்நிலையத்தின் புலனாய்வு அதிகாரியான ஜி.எச்.லெம்குடே கூரும் போது, ‘பெற்றோர்கள் தங்களுடைய மகளின் மேல்கொண்ட அக்கறையினால் கூறியதற்கு நடந்துள்ள விபரீதம்' எனக் குறிப்பிட்டிள்ளார்.
Share:

டில்லி பரபரப்பு:டில்லி மூன்று ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

 டில்லி பரபரப்பு:டில்லி மூன்று ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

 சேர்ந்தவன் ரவுடி டபொடியாடில்லியை. இவன் தலைக்கு 1 லட்சம் ரூபாய் டில்லி போலீசார் விலை வைத்திருந்தனர்.இன்னிலையில் டில்லி ஹயாத் ஹோட்டல் அருகே இரு நண்பர்களுடன் இருந்த டபொடியாவை டில்லி போலீசார் சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டதில் டபொடியாவும் நண்பர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
Share:

Tuesday, October 22, 2013

அமெரிக்க விளையாட்டு: ஆசிரியரை சுட்டுக் கொன்ற மாணவன்.

அமெரிக்க விளையாட்டு: ஆசிரியரை சுட்டுக் கொன்ற மாணவன்.
அமெரிக்காவில் தொடர்ந்து பள்ளிகளில் குற்றச்செயல்கள் நடைபெற்றவண்ணம் உள்ளது.இன்று ஒரு கலிபோர்னியா அருகே ஒரு மாணவன் ஆசிரியரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது அமெரிக்கர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Share:

Thursday, September 19, 2013

ராஜிவ் காந்தி கொலை வழக்கு :சி.பி.ஐ.க்கு தடா நீதிமன்றம் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நோட்டிஸ். 

ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பேரரிவாளன் தொடர்ந்த வழக்கில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகள் ,அதன் தலைவர்கள் மற்றும் தாணு தங்க இடமளித்த காங்கிரஸ் பெண் பிரமுகர் ஆகியோரை விசாரணை நடத்தாதது சுட்டிக்காட்டபட்டதால் இந்த கேள்விக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு தடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share:

Wednesday, September 18, 2013

அண்ணா மேம்பாலத்தில் இருந்து 26 வயது பெண் கீழே குதித்து பட்டப்பகலில் தற்கொலை:கள்ளக்காதல் காரணம்!



26 வயது இளம்பெண் ஒருவர் சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து நண்பகல் நேரத்தில் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பையும் சோகத்தையும் ஒரு சேர உண்டாக்கியுள்ளது.ஏற்கனவே திருமணமான இந்தப் பெண்ணின் கள்ளக்காதல்தான் இந்த முடிவுக்கு காரணம் என்பது அதைவிட கலாச்சார வேதனை.
Share:

Monday, September 16, 2013

பி.பி. ஸ்ரீநிவாஸ் நெஞ்சம் மறப்பதில்லை (slide show)
click video

https://www.youtube.com/watch?v=yv_DOwex1sM
Share:

தேர்தல் வியூகம் கருணா நிதி அறிவிப்பு

தேர்தல் வியூகம் குறித்த பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு விரைவில் அறிவிக்க உள்ளதாக கருணா நிதி பதில் அளித்துள்ளார்.தொண்டர்கள் ரெடியா?
Share:

அமெரிக்க பயங்கரம்:ராணுவ உடையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு:வாஷிங்டன் கடற்படை தளத்தில் பயங்கரம்.13 பேர் பலி.

அமெரிக்க தலை நகர் வாஷிங்டன் கடற்படை தளத்தில் ராணுவ உடையில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அதிகாரிகள் இருவர் , காவல் துறை,பொதுமக்கள் என 13 பேர் பலியாகினர்.தாக்குதல் நடத்திய ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.மற்றவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.அமெரிக்க அதிபர் இச்சம்பவத்தை கோழைத்தனமான செயல் என்று கண்டனம் செய்துள்ளார்.
Share:

மும்பையில் கொடுமை :4 வயது சிறுமி பாலியல் பலத்காரம்

மும்பையில் பள்ளி பேருந்து ஒன்றில் 4 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தானேவில் உள்ள ஒரு பள்ளியின் பேருந்தில் வகுப்பு முடிந்து 4 வயது சிறுமியும் அவளது தோழியும் அமர்ந்துள்ளனர்.

சிறுமியும் அங்கு சென்றுவிட, அந்த நபர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளான். சிறுமியின் தோழி அவளை பாதுகாக்க முயன்றப்போது, அந்த கிளீனர் நடந்தவற்றை யாரிடமாவது கூறினால் இரண்டு பேரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளான்.

இதனால் பயந்துப்போன சிறுமிகள் இருவரும் யாரிடமும் இது குறித்து பேசவில்லை. இந்நிலையில் சிறுமியை உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து சிறுமி, தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் பள்ளி பேருந்து கிளீனர் கைது செய்யப்பட்டு அவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
Share:

செம்மொழி மா நாட்டில் ஊழல் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

செம்மொழி மா நாட்டில் 200 கோடி ரூபாய்  ஊழல் நடந்துள்ளதாக வழக்கறிஞர் ரமேஷ்குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
Share:

போலாந்து பெண் ஒரு லட்சம் ஆண்களுடன் உடலுறவு கொள்ள போவதாக அறிவிப்பு.

போலாந்து பெண் 21 வயது லிசவ்ச்கா .இவர் ஒரு லட்சம் ஆண்களுடன் உடலுறவு கொள்ள போவதாக அறிவித்தது மட்டுமல்லாமல் இதர்கென உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.மொராக்கொ,எஹிப்து நாடுகள் இவ்ருக்கு தடை விதித்துள்ளன.
Share:

கடைசி அணு உலையையும் ஜப்பான் மூடியது


ஜப்பான் நாட்டில் செயல்பட்ட கடைசி அணு உலைமுன் அறிவிப்பின்றி மூடப்பட்டது.பராமரிப்பிற்காக என்று சொல்லப்பட்டாலும் திறக்கப்படும் தேதி சொல்லப்படவில்லை.
Share:

Sunday, September 15, 2013

இனப்படுகொலை நடக்கும் போது கண்டுகொள்ளாமல் இருந்த திமுகவுடன் மக்களவை தேர்தலில் கூட்டணி கிடையாது: வைகோ
 
இனப்படுகொலை நடக்கும் போது காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்த திமுக அதை கண்டுகொள்ளாமல் இருந்தது, அதனால் வரும் மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கிடையாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
        தொண்டர்களின் எண்ணப்படியே மக்களவை தேர்தலில் மதிமுக போட்டியிடும் என்பதால் தொண்டர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும். இதில், முதல் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களை சேர்க்க வேண்டும்.  யாரோடு கூட்டணி என்பது எனக்கும், எனது கட்சி தொண்டர்களுக்கும் மறைமுகமாக தெரியும். சரியான நேரம் வரும் போது அறிவிப்பை வெளியிடுவேன். ஊழல் மற்றும் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த காங்கிரஸ் அரசு அல்லாத மாற்று அரசு உருவாக வேண்டும். இந்த மாற்று அரசு அமைப்பதற்காக மதிமுகவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

   தமிழகத்தில் பொதுமக்களின் பிரச்னைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். அதனால், பொதுமக்களின் கவனம் முழுவதும் மதிமுகவின் பக்கம் திரும்பியுள்ளது. உங்களுக்காக குரல் கொடுப்பதற்கு புதுதில்லிக்கு அனுப்பி வையுங்கள். அதேபோல், இலங்கையில் தனி ஈழம் அமைப்பதற்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றார் வைகோ.
Share:

Saturday, September 14, 2013



டீக்கடையில் வாழ்க்கையை துவங்கி, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக உயர்ந்துள்ள மோடி!

குஜராத் மாநிலம், மேஹ்சனா மாவட்டம், வத் நகரில், 1950 செப்டம்பர், 17ல், நடுத்தர குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, குஜராத் பல்கலைக் கழகத்தில், அரசியல் அறிவியலில், முதுகலை பட்டம் பெற்றார்.பள்ளிப் பருவத்திலேயே, அகில பாரதிய வித்யா பரிஷத் அமைப்பில் இணைந்து, ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட அவர்,பட்டப் படிப்பு முடித்த பின், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், தன்னை இணைத்துக் கொண்டார். தன் சகோதரருடன், டீக்கடை நடத்தி வந்த மோடி, பா.ஜ.,வில், அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து பணியாற்றினார். பா.ஜ., கட்சியில், இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதல் தலைவர் மோடி.

திருமணம் புரியாமல் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டிய இவர், பல்வேறு மூத்த தலைவர்களின் கவனத்தை கவர்ந்தார். அதனால், 1995ல், ஐந்து மாநில பொறுப்புகளை கவனிக்கும், கட்சியின் தேசியச் செயலராக நியமிக்கப்பட்டார். 1998ல், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, அப்போதைய கட்சித் தலைவர் அத்வானியால் நியமிக்கப்பட்டார். இதன் மூலம், மோடி தன் பணியை திறம்படச் செய்து, கட்சியில் தன் முக்கியத்துவத்தை நிரூபித்தார். 2001ல், குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, அப்போது, எம்.எல்.ஏ.,வாக இல்லாத மோடி, மேலிடத் தலைவர்களால் நேரடியாக முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன் பின், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியில் இவரைப் போன்ற ஏழ்மையான பின்னணி கொண்ட தலைவர் இல்லை. மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளாக வகுப்புவாத கலவரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.விவசாயம், சிறு தொழில் மற்றும் விவசாயத்துறையின் வளர்ச்சியையே முக்கிய நோக்கமாக கொண்டவர் மோடி.சமூகத்தின் அனைத்து பிரிவினரினரும் வளர்ச்சி அடைய உழைத்து வருகிறார்.மற்ற கட்சிகளைப் போல், போலி மதச்சார்பின்மை பேசி நடிக்கவில்லை.அதே போல், என்றுமே தான் ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்துள்ளதாகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் விளம்பரப்படுத்தாதவர் மோடி.அனைவரும் சமம் என்பதே மோடியின் தாரக மந்திரம்.இதன் காரணமாக, யாரையும் சரிகட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர் மோடி.
முதல்வரான பின், கட்சி வளர்ச்சி மட்டுமின்றி, மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்திய மோடி, 2002, 2007 மற்றும் 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில், அடுத்தடுத்து, ஹாட்ரிக் வெற்றி பெற்றார். குஜராத்வரலாற்றிலேயே, நீண்ட காலம் முதல்வராக இருக்கும் பெருமையையும் பெற்றுள்ளார். 
Share:

மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும்:பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பாஜகவின் தமிழ் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

நாட்டை ஆளும் தகுதியும் திறமையும் படைத்த நரேந்திர மோடி மக்களின் அமோக ஆதரவுடன் பிரதமராவது உறுதியாகிவிட்டது.வருகிற 26ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். ரஜினிகாந்த் வெறும் நடிகர் மட்டுமல்ல. நாட்டு மக்களை நேசிக்கும் நல்ல மனிதர். நாட்டில் நல்லாட்சி மலர மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.
Share:

Blog Archive

Definition List

Unordered List

Support