அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

Tuesday, December 3, 2013

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நிலை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி ஐந்து நாள் இலங்கை பயணம்.


இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் ஒட்டுமொத்த நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி ஐந்து நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார்.
அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ஐ நா வின் சிறப்புத் தூதார் சாலோகா பெயானி, நேரடியாகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவிருப்பதாக ஐ நா செய்திக் குறிப்பு கூறுகிறது.

மனித உரிமை, மீள்குடியேற்றம், போர்
அவ்வகையில் இடம்பெயர்ந்த மக்களையும், பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களையும் அவர் நேரடியாக சந்திக்கவுள்ளார். தமது பயணத்தின் போது அவர் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்வார் எனவும் ஐ நாவின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் காத்திரமான தீர்வுகள் குறித்து தான் கவனம் செலுத்தவுள்ளதாக பெயானி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அவர்களின் பாதுகாப்பு மற்றும் மற்றும் உதவிகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும் அவர் அங்கு விவாதிப்பார். தமது பயணத்துக்கு பிறகு தான் கண்டவை குறித்து முதற்கட்டமாக எழுத்துபூர்வமான ஒரு அறிக்கையை அவர் வெளியிடவுள்ளார்.


அவரது பயணம் குறித்த முழுமையான அறிக்கை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் சமர்பிக்கப்படும்.
இன்று தொடங்கி எதிர்வரும் ஆறாம் தேதி வரையிலான இந்தப் பயணத்தின்போது, அரச தரப்பினர், சிவில் சமூகத்தினர் மற்றும் இலங்கையிலுள்ள ஐ நாவின் உயரதிகாரிகள் ஆகியோரையும் பெயானி சந்திப்பார் என்று அவரது பயணம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.
Share:

0 comments:

Post a Comment

Definition List

Unordered List

Support