இனப்படுகொலை நடக்கும் போது கண்டுகொள்ளாமல் இருந்த திமுகவுடன் மக்களவை தேர்தலில் கூட்டணி கிடையாது: வைகோ
இனப்படுகொலை நடக்கும் போது காங்கிரஸ்
கூட்டணியுடன் இருந்த திமுக அதை கண்டுகொள்ளாமல் இருந்தது, அதனால் வரும்
மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கிடையாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தெரிவித்தார்.
தொண்டர்களின் எண்ணப்படியே மக்களவை தேர்தலில்
மதிமுக போட்டியிடும் என்பதால் தொண்டர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும். இதில், முதல் கட்டமாக
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களை சேர்க்க வேண்டும். யாரோடு கூட்டணி
என்பது எனக்கும், எனது கட்சி தொண்டர்களுக்கும் மறைமுகமாக தெரியும். சரியான நேரம்
வரும் போது அறிவிப்பை வெளியிடுவேன். ஊழல் மற்றும் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த
காங்கிரஸ் அரசு அல்லாத மாற்று அரசு உருவாக வேண்டும். இந்த மாற்று அரசு
அமைப்பதற்காக மதிமுகவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் பொதுமக்களின் பிரச்னைக்காக
தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். அதனால், பொதுமக்களின் கவனம்
முழுவதும் மதிமுகவின் பக்கம் திரும்பியுள்ளது. உங்களுக்காக குரல் கொடுப்பதற்கு
புதுதில்லிக்கு அனுப்பி வையுங்கள். அதேபோல், இலங்கையில் தனி ஈழம்
அமைப்பதற்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றார் வைகோ.






0 comments:
Post a Comment