அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

Saturday, September 14, 2013



டீக்கடையில் வாழ்க்கையை துவங்கி, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக உயர்ந்துள்ள மோடி!

குஜராத் மாநிலம், மேஹ்சனா மாவட்டம், வத் நகரில், 1950 செப்டம்பர், 17ல், நடுத்தர குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, குஜராத் பல்கலைக் கழகத்தில், அரசியல் அறிவியலில், முதுகலை பட்டம் பெற்றார்.பள்ளிப் பருவத்திலேயே, அகில பாரதிய வித்யா பரிஷத் அமைப்பில் இணைந்து, ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட அவர்,பட்டப் படிப்பு முடித்த பின், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், தன்னை இணைத்துக் கொண்டார். தன் சகோதரருடன், டீக்கடை நடத்தி வந்த மோடி, பா.ஜ.,வில், அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து பணியாற்றினார். பா.ஜ., கட்சியில், இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதல் தலைவர் மோடி.

திருமணம் புரியாமல் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டிய இவர், பல்வேறு மூத்த தலைவர்களின் கவனத்தை கவர்ந்தார். அதனால், 1995ல், ஐந்து மாநில பொறுப்புகளை கவனிக்கும், கட்சியின் தேசியச் செயலராக நியமிக்கப்பட்டார். 1998ல், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, அப்போதைய கட்சித் தலைவர் அத்வானியால் நியமிக்கப்பட்டார். இதன் மூலம், மோடி தன் பணியை திறம்படச் செய்து, கட்சியில் தன் முக்கியத்துவத்தை நிரூபித்தார். 2001ல், குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, அப்போது, எம்.எல்.ஏ.,வாக இல்லாத மோடி, மேலிடத் தலைவர்களால் நேரடியாக முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன் பின், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியில் இவரைப் போன்ற ஏழ்மையான பின்னணி கொண்ட தலைவர் இல்லை. மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளாக வகுப்புவாத கலவரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.விவசாயம், சிறு தொழில் மற்றும் விவசாயத்துறையின் வளர்ச்சியையே முக்கிய நோக்கமாக கொண்டவர் மோடி.சமூகத்தின் அனைத்து பிரிவினரினரும் வளர்ச்சி அடைய உழைத்து வருகிறார்.மற்ற கட்சிகளைப் போல், போலி மதச்சார்பின்மை பேசி நடிக்கவில்லை.அதே போல், என்றுமே தான் ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்துள்ளதாகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் விளம்பரப்படுத்தாதவர் மோடி.அனைவரும் சமம் என்பதே மோடியின் தாரக மந்திரம்.இதன் காரணமாக, யாரையும் சரிகட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர் மோடி.
முதல்வரான பின், கட்சி வளர்ச்சி மட்டுமின்றி, மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்திய மோடி, 2002, 2007 மற்றும் 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில், அடுத்தடுத்து, ஹாட்ரிக் வெற்றி பெற்றார். குஜராத்வரலாற்றிலேயே, நீண்ட காலம் முதல்வராக இருக்கும் பெருமையையும் பெற்றுள்ளார். 
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support