மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க
வேண்டும்:பொன்.ராதாகிருஷ்ணன்
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர
மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பாஜகவின் தமிழ் மாநில
தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
கூறியதாவது:-
நாட்டை ஆளும் தகுதியும் திறமையும் படைத்த நரேந்திர
மோடி மக்களின் அமோக ஆதரவுடன் பிரதமராவது உறுதியாகிவிட்டது.வருகிற 26ம் தேதி
திருச்சியில் நடைபெறும் மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். ரஜினிகாந்த்
வெறும் நடிகர் மட்டுமல்ல. நாட்டு மக்களை நேசிக்கும் நல்ல மனிதர். நாட்டில்
நல்லாட்சி மலர மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.







0 comments:
Post a Comment