எபொலா வைரஸ் சில உண்மைகள்! அறிகுறிகள்.
மேற்கு ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் விலங்குகளில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவி வருகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா, சியர்ரா லியோன், கினியா மற்றும் நைஜீரியாவில் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 932 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் வேற்று நாட்டவர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பினால் எபோலா பல நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில் மக்களை பீதியடையச் செய்யும் எபோலா வைரஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
எபோலா நோயின் அறிகுறிகள்.
எபோலா வைரஸ் தாக்கினால் காய்ச்சல், உடல் சோர்வு, தசை வலி, தொண்டை வலி, தலைவலி ஆகியவை எற்படும். இது தான் எபோலா நோயின் அறிகுறிகள்.
காய்ச்சல், வலியோடு நின்றுவிடாமல் அடுத்ததாக வாந்தி, பேதி, சிறுநீரக மற்றும் நுரையீரல் செயல் இழப்பு, சில நேரம் வெளி மற்றும் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்படும்.
எபோலா வைரஸ் விலங்குகளிடம் இருந்து தான் மனிதர்களுக்கு பரவுகிறது. வைரஸ் தாக்கிய விலங்குளின் ரத்தம், மலம் உள்ளிட்டவற்றில் இருந்து பரவுகிறது.
எபோலா வைரஸால் தாக்கப்பட்டவரின் ரத்தம் அல்லது மல, ஜலத்தில் இருந்து பிற மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது.
எபோலா வைரஸ் தாக்கி அறிகுறிகள் தெரிய 2 முதல் 21 நாட்கள் வரை கூட ஆகலாம்.
எபோலா நோய்க்கு இது தான் சிகிச்சை என்ற ஒன்று இல்லை. இருப்பினும் தீவிர சிகிச்சை மூலம் சிலர் குணமடையலாம்.
எபோலா நோயை தடுக்க மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்ட போதிலும் அவை சந்தையில் தற்போது இல்லை.






0 comments:
Post a Comment