Home »
» காதலித்து மணந்த அண்ணண் தங்கை ,உண்மை தெரிந்தும் தொடர்ந்து வாழ முடிவு
காதலித்து மணந்த அண்ணண் தங்கை ,உண்மை தெரிந்தும் தொடர்ந்து வாழ முடிவு
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில், அட்ரியானா என்ற பெண்ணும், லியான்ட்ரோ என்ற ஆணும் காதலித்து, எட்டாண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்; அவர்களுக்கு, 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவருமே, சிறு வயதில் அனாதை ஆனவர்கள். தாய், தந்தையை இழந்த அவர்கள், வேறு வேறு காப்பகங்களில் வளர்ந்துள்ளனர். வாலிப வயது வந்ததும், ஒருவரை ஒருவர் காதலித்து மணந்து கொண்டனர். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க, அந்நாட்டில் ஒரு அமைப்பு உள்ளது. அதில், தங்கள் தாயை கண்டுபிடிக்க, இருவரும் பதிவு செய்து வைத்திருந்தனர். அந்த விவரத்தை, அந்த ஜோடி தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒருநாள், அவர்களின் தாய் இருக்கும் இடத்தை, அந்த சமூக அமைப்பு கண்டுபிடித்து, அவர்களை தங்கள் மையத்திற்கு வரவழைத்திருந்தது. தகவல் அறிந்து அந்த ஜோடி, தங்கள் தாயை காண சென்ற போது தான், இருவரும் அண்ணன், தங்கை என்பது தெரிய வந்தது. இருவரும் தேடி வந்த அவர்களின் தாய், மரியா, ஒரே நேரத்தில் தன் இரு குழந்தைகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், அவர்கள், கணவன், மனைவியாக இருந்ததை அறிந்து கதறி அழுதார். இதனால், முதலில் அதிர்ச்சி அடைந்த அந்த ஜோடி, ஆண்டவன் தங்களை வேறு விதமாக இணைத்திருப்பதாகக் கூறி, இல்வாழ்க்கையை தொடர முடிவு செய்வதாக அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment