இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் சேஷாத்ரி 2014-ஆம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசை வென்றுள்ளார்.
நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 98-வது புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 2014-ஆம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் சேஷாத்ரி வென்றுள்ளார். அவர் எழுதிய "3 செக்ஷன்ஸ்" என்ற கவிதைத் தொகுப்பிற்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
சேஷாத்ரி 10,00 அமெரிக்க டாலர்களை பரிசுப் பணமாக பெறவுள்ளார். பெங்களூரில் 1954-ஆம் ஆண்டு பிறந்த சேஷாத்ரி, தனது 5வது வயதில் அமெரிக்காவுக்கு சென்றவர். அங்கு ஒஹியோவின் கொலம்பஸ் பகுதியில் வளர்ந்தார். சேஷாத்ரி தற்போது நியூயார்க்கின் சாரா லாரன்ஸ் கலைக் கல்லூரியில் கவிதை மற்றும் கதை எழுதக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிட்சர் பரிசு பெறும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5வது நபர் விஜய் சேஷாத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment