This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Tuesday, August 28, 2018
Friday, August 24, 2018
மலையாள இதழ் தேசாபிமாணியில் வெளிவந்த கவர் ஸ்டோரியின் தமிழாக்கம் 👌
Zen Selvaa சுவர் வழியாக
______________.
மலையாள இதழ் தேசாபிமாணியில் வெளிவந்த கவர் ஸ்டோரியின் தமிழாக்கம் 👌
(முழுவதும் படித்தவர்கள் மட்டும் லைக் இடவும்)
பெரியாரின் தொடர்ச்சி..
தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவுக்குப் பின் வேறெந்த சமூக, அரசியல் தலைவனின் இறுதி அஞ்சலிக்கும் இத்தனை லட்சம் மக்கள் திரண்டதில்லை என அரசியல் விமர்சர்கள் கலைஞரின் இறுதி அஞ்சலி நிகழ்வை மதிப்பிடுகிறார்கள். கிட்டதட்ட தமிழ்நாட்டின் அத்தனை கிராமங்களும், நகரங்களும் தங்கள் இயல்பை அப்படியே நிறுத்திவிட்டு சென்னையை நோக்கி திரும்பியது. ஒரு மகத்தான தலைவனால் மட்டுமே எந்த புற உந்துதல்களுமின்றி மக்களை இப்படி உந்தித் தள்ள முடியும்.
கலைஞர் கருணாநிதி நம் ஒவ்வொருவரின் மதிப்பீடுகளையும் மீறி உலகம் முழுக்க வியாபித்திருக்கும் மக்கள் மனதில் உறைந்திருந்தார். நீதிக்கட்சி, திராவிடக்கழகம், திராவிடமுன்னேற்றக்கழகம் என ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பெயரில் அடையாளப்படுத்தப் பட்டாலும், சமூக நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் கேட்கும் அந்த இயக்கத்தின் குரல் காலத்துக்கு காலம் உரத்தும், தேய்ந்தும் இப்போதும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. கடந்த நூறாண்டுகளை சமமாக நாம் பிரித்துக் கொண்டால் முன் பாதிக்கான போராட்டத்தை பெரியாரும், அண்ணாவும் முன்னெடுக்கிறார்கள். அவர்களிடமிருந்து கொள்கையையும் போராடும் குணத்தையும் அப்படியே சுவீகரித்துக் கொண்ட கருணாநிதி அடுத்த ஐம்பதாண்டுகளை தன் தலைமையின் கீழ் முன்னெடுத்தார்.
அதில் நம் எதிர்பார்ப்புகளை மீறின சில சறுக்கல்கள் உண்டு. உலகம் முழுக்க தொடர்ந்து இயங்கும் அரசியல் இயக்கங்களில் இப்படியான சறுக்கல்கள் இல்லாத அரசியல் இயக்கம் எது? தன் முன்னத்தி தலைவர்களிடம் தான் பெற்ற தீயை இது நாள்வரை அணையவிடாமல் காத்ததுதான் கருணாநிதி என்ற ஆளுமையின் தனிப்பெரும் கம்பீரம். அதனாலேயே மக்கள் அவரை தன் நம்பிக்கைக்குரிய தலைவனாக தங்களுக்குள் அடைகாத்துக் கொண்டார்கள்.
திமுகவின் செயல் தலைவரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் தன் தந்தையின் உயிரற்ற உடலுக்கு முன் நின்று ஒரு ட்விட் போட்டார். தமிழ் மக்களை ஒரு கணம் கலங்க வைத்த நான்கு வார்த்தைகள் அது.
“தலைவரே, இப்போதாவது ஒரு முறை
அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா?”
கலைஞரும், ஸ்டாலினும் திமுக என்ற பேரியக்கத்தின் இரு மூத்த உறுப்பினர்களாகவே நடந்து கொண்டார்கள். எம்.எல்.ஏ.க்கான நேர்கர்ணலில் தலைவர் கலைஞர், பேராசியர் அன்பழகன் முன் ஒரு கல்லூரி மாணவனைப்போல ஸ்டாலின் நேர்காணலுக்காக அமர்ந்திருந்த ஒரு புகைப்படம் ஏனோ இன்னேரம் நினைவுக்கு வருகிறது.
நேர்காணல் இல்லாமல்கூட ஸ்டாலினால் அந்த இடத்தை சுலபமாக அடைந்துவிட முடியும். ஒரு ஜனநாயக இயக்கம் பொது வெளிகளில் அப்படி நடந்து கொள்ள முடியாது. அல்லது கூடாது என்பதை இருவரும், அக்கட்சித் தொண்டர்களைப் போலவே நன்கு அறிந்திருந்தனர்.
தன் பதினாங்காவது வயதில் ஒரு மாணவனாக தன் கையில் கொடியை ஏந்திக்கொள்கிறார் கருணாநிதி. தன் தொண்ணூற்றி நான்கில் தன் மரணத்தின் போதும் இடைவிடாத தன் போராட்டத்தை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. ஆட்சியில் இல்லாதபோது வேறு மாதிரியும் ஆட்சியில் இருந்த போது ஆதிக்க சாதித் திமிரையும், துரோகங்களையும் எதிர்த்து அவர் போராட வேண்டியிருந்தது.
தன் வாழ்நாளில் தான் அதிகம் நேசித்த தன் அண்ணன் அண்ணா சமாதிக்கு அருகே தானும் விதைக்கப்பட வேண்டுமென அவர் விருப்பம் ஆட்சியாளர்களால் சுலபமாக துடைத்தெறியப்பட எடுத்த எல்லா முயற்சிகளும் சுலபத்தில் முறியடிக்கப்பட்டு, அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணாவுக்கு அருகிலேயே கல்லறை என்ற முடிவு எட்டப்பட்டபோது துக்கமே பெரும் ஆனந்தமாக மாறி, மு.க.ஸ்டாலின் தன் கண்ணீரை கைகள் கொண்டு அடைக்க முயன்றும், தன் கைகளை நீட்டி தன் கட்சியின் மூத்த தலைவர் துரை முருகன், தன் தங்கை கவிஞர் கனிமொழி இவர்களை தன் தோள்களில் அணைத்த காட்சிப்பதிவு அத்தனை சுலபமாக கடந்துவிட முடியாத ஒன்று. அது காலத்தின் உறைநிலை. சமூக நீதியை எட்டுவதற்கான ஐம்பதாண்டு கால உழைப்பு அக்கண்ணீருக்கு பின்னிருக்கிறது.
உலகின் மகத்தான தலைவர்கள் அனைவருமே, தங்கள் மக்களிடம் பேச ஏதாவதொரு முறையை தேர்தெடுத்துக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர் க்கு உடல்மொழியும் கையசைப்பும் மட்டுமே போதுமானதாக இருந்தது.
கலைஞர் முரசொலி என்ற தன் கட்சி பத்திரிக்கையில் ’ உடன்பிறப்பே ! ‘ என தன் தம்பிகளை அழைத்து தன் எல்லா கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். எழுதி எழுதித் தீராத தன் பேனாவை சில சமயங்களில் ஓய்வெடுக்க வைத்து விட்டு மேடைகளில் பேச ஆரம்பித்தார்.
அன்பார்ந்த என ஆரம்பித்து சற்று இடைவெளி விட்டு கூட்டத்தின் மொத்த மௌனத்தையும் உள்வாங்கி
‘என் உயிரினும் மேலான உடன்பிறப்பே’
என அந்த வாக்கியத்திற்கு அவர் கமா போடுகையில் எழுகிற கரவொலியை தமிழகத்தின் எல்லா நகரங்களும் கிராமங்களும் விழித்திருந்து கேட்டிருக்கின்றன.
காற்று அந்த கரவொலியின் வலிமையை டெல்லிவரை எடுத்துச் சென்று சேர்த்திருக்கிறது. அதனாலேயே பல பிரதமர்களின் உருவாக்கத்தில் இந்த எளிய ஆனால் வலுவான திராவிட மனிதனுக்கு மகத்தான பங்கிருந்தது.
தந்தை பெரியாருக்கும், பேரறிஞர் அண்ணாவிற்கும் பல சமூக கனவுகள் இருந்தன. தீண்டாமை ஒழிப்பு, விதவைமறுமணம் எனத் துவங்கும் அப்பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டேயிருந்தன. தான் முதல்வராக பணியாற்றிய 5 முறையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றியவர் கருணாநிதி. அரசின் உள்ளிருந்து எழுந்த எதிர்ப்புகளை அநாவசியமாக புறந்தள்ளினார்.
தெருக்களின் பெயர்மாற்றம், சாதியின் பெயர்களால் அடையாளப்படுத்தப் பட்ட அத்தனையையும் அப்புறப்படுத்தியது, வரலாற்றில் நிலைக்கும் நினைவிடங்கள் உருவாக்கம். வள்ளுவர் கோட்டம் துவங்கி வள்ளுவனுக்கு குமரிக்கடலில் சிலை வைத்தது வரை வேறெந்த அரசியல் தலைவனின் மூளைக்குள்ளும் உதிக்காத சிந்தனைகள்.
மக்கள் இவைகளை மறந்துவிடக்கூடாது என நினைக்கும்போதெல்லாம் மாநாடுகள், கவியரங்குகள் என தன் பகுத்தறிவு கொள்கைகளை காலத்தின் முன் விதைத்துக் கொண்டே இருந்த மகத்தான தலைவர் அவர் மறந்து கொண்டேயிருப்பது மக்களின் இயல்பு, நினைவுப்படுத்திக் கொண்டுயிருப்பது கலைஞனின் கடமை என்ற வாக்கியத்திற்கு ஒரு வாழும் உதாரணமாக நாம் கலைஞரின் பொது வாழ்வை மதிப்பிடலாம். .
தொண்ணூற்றி நான்கு வயது மரணம் ஒரு மூப்பனின் மரணம், ஒரு வயோதிக மரணத்திற்க்கான காத்திருப்பு என எம் தமிழ்மக்கள் யாரும் உதாசீனபடுத்த முடியாத மகத்தான மரணம் அது. வயோதிகர்கள், பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டமாய் தன் தலைவனின் முகத்தை கடைசியாய் ஒருமுறை தரிசிக்க வேண்டி தமிழகத்தின் எல்லா திசைகளிலிருந்தும் வந்து குவிந்தார்கள். திராவிடத்தின் பலம் தாங்காமல் சென்னை ஒரு நிமிடம் திணறிய காட்சியை உலகமே வியர்ந்து பார்த்தது.
கூவம் கரையோரங்களில் எந்த பாதுகாப்பும், சுகாதாரமுமின்றி குடிசை வீடுகளில் வாழ்ந்து தீர்த்த பல ஆயிரம் குடும்பகளை பல மாடி ஹவுசிங் போர்டு வீடுகள் கட்டி குடியமர்த்திய தன் தலைவனுக்கு அவர் ஒவ்வொரு முறையும் ஓட்டு கேட்க வரும் போது தங்கள் குழந்தைகளின் கையில் மலர்களை தந்து அவர் மீது தூவ வைத்து அழகு பார்த்த எளிய மக்களின் பேரன்புதான் இத்தனை லட்சம் மக்களை தன் தலைவனை வழி அனுப்ப கூட்டி வந்தது.
பலமுறை கட்சி உடைந்திருக்கிறது. தனக்கு நெருங்கிய பலரே துரோகத்தால் அம்மனிதனின் முதுகில் கூரிய கத்திகளை செருகியிருக்கிறார்கள். இனி அவ்வளவுதான் ‘திமுக’ என்ற சொல் தொடர்ந்து அவரின் எதிரிகளால் ஒரு இயந்திர தொழிற்சாலையின் உற்பத்தி போல நிகழ்ந்திருக்கிறது. அவைகளை ஒரு முற்றிய மரத்தின் உறுதியோடு தனக்குள்ளேயே ஏற்றுக் கொண்டு,
“என் உயிரிலும் மேலான உடன்பிறப்பே”
என பல லட்சம் மக்களின் ஆரவார வரவேற்பில் அந்த வலியை கரைந்திருக்கிறார்.
பெரியாரும் அண்ணாவும் கூட கலைஞர் அளவுக்கு களப்பணியையும், மக்கள் செல்வாக்கையும் பெற்றவர்கள் அல்ல.
பெரியார், தன் தொடர் பிரச்சாரம் மூலம் மக்கள் மனங்களை மெல்ல மெல்ல வென்றுவிட முடியும் என நம்பினார்.
சட்டத்தை இயற்றுகிற கைகள் தனதாயின் இச்சமூக அவலங்களை ஏன் நிறுத்திவிட முடியாது? என அண்ணா நினைத்தார் ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல் காலம் அவரைத் தின்று தீர்த்தது.
இவர்களிலிருந்து எழுந்து வந்த கலைஞர், எழுத்து, பேச்சு, செயல், கலை, இலக்கியம், ஆட்சி, அதிகாரம், என சகல துறைகளிலும் நின்றெழுந்து மக்களை தன் தொடர் செயல்பாட்டினால் மக்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டேயிருந்தார்.
திராவிட இயக்கங்கள் அதுவரை கட்டிக்காத்த மதச்சார்பின்மையை என்ன காரணத்தாலோ வாஜ்பாயின் அரசில் பங்கெடுத்ததின் மூலம் பலிகொடுத்தார் கலைஞர். ஆனால் நீண்ட வரலாற்றில் எந்த மகத்தான தலைவனுக்கும் அப்படி சில சறுக்கல்கள் இருக்குமென, அதை வரலாற்றின் பக்கங்களிலிருந்து நீக்கிவிடலாம்.
75 திரைப்படங்களின் உருவாக்கத்தில் பங்கெடுப்பு, பல நூறு நாடகங்கள், குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பிய பூங்கா என இடைவிடாத எழுத்துச் செயல்பாடு. கைகள் அனுமதித்த வரை எழுத்து, சொல் சிதறாதவரை உரை, என கடைசிவரை இயங்கிய ஒரு சமூக செயற்பாட்டாளனாக தமிழ் சமூகத்தின் முன் உயர்ந்து நின்றவர் கருணாநிதி.
இதுவரை சுமார் 2 லட்சம் பக்கங்கள் அவரால் எழுதப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. சலிப்பின்றி இயங்கும் ஒரு படைப்பு மனத்திற்கே இதுவெல்லாம் சாத்தியம்.
ஆட்சியிழப்பு, குடும்ப சண்டைகள், முதுமை, நோய்மை, தனிமை, புறக்கணிப்பு இவைகளின் முதல் கோரிக்கை பலியே எழுத்தும், பேச்சும் தான். எச்சூழலிலும் கலைஞர் அதை மட்டும் தன் இன்னொரு கண் போல் காத்துக் கொண்டார்.
பல உச்சங்களை தொட்ட அடுத்த நாளே பள்ளத்தில் வீழ்ந்திருக்கிறார். இந்தியாவிற்கு ஒரு பிரதமரை உருவாக்கிக் கொடுத்தக் கணத்தில் அவர் லோக்கல் போலீஸ்காரர்களால் ஒரு கிரிமினலைப் போல நடு இரவில் இழுத்து செல்லப்பட்ட காட்சி, அவர் எழுப்பிய மரண ஓலம், தமிழகமெங்கும் இருந்த மக்களை அச்சப்பட வைத்தது. உள்ளுக்குள் ஆத்திரப்பட வைத்தது. லுங்கி கட்டிக் கொண்டு சென்னை சிறை வாசலில் அவர் நடத்தியப் போராட்ட காட்சி எளிய மக்களின் மனங்களில் பனி போல உறைந்திருந்தது.
அடுத்த தேர்தலில் அவரையே தங்கள் முதல்வராக பார்த்த பின்பே அந்த பனி உருகியது எனலாம்.
வரலாறு நெடுக போராட்டங்களையே தன் வாழ்வு பக்கங்களில் குறித்துக் கொண்டார் கலைஞர். அவர் இறந்த பின்பும் அதன் ஒரு நாள் மிச்சமிருந்தது.
அது தான், தான் மரணித்து தன் புதையலுக்காக அவர் நடத்தியப் போராட்டம். அதிலும் அவர்தான் இறுதியில் வென்றார்.
உலகமே வாயடைத்த நின்ற அந்த கணம்தான், போராட்டங்களால் நிறைவு பெறுகிற வாழ்வு அத்தனை எளிதானது அல்ல என்றும், கனி அழுகி வீரிய விதையாக முளை எழுப்பி, விருட்சமாகி, ஆயிரம் ஆயிரம் பறவைகளை தன் தோள் மீது அமர்த்தி வைத்து ஒரு போரட்ட ஆசிரியனைப் போல தன் நீண்ட நெடிய வாழ்வை பறவைகளுக்கும் கற்றுத் தரும். அப்படித்தான் கலைஞர் நம்முன்னே கம்பீரமாய் முன்செல்கிறார்.
( நன்றி - Bava Chelladurai Bava )
#Kalaignar4Life |#ThankyouMK | #Kalaignarist | #கலைஞரிஸ்ட் | #BharatRatna4Kalaignar |
#Karunanidhi | #WhyIlikeMK | #DMK |
#திராவிடபேரரசன்கலைஞர்
Sunday, August 19, 2018
நீரிழிவுக்காரர்களுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இல்லை
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.
நீரிழிவுக்காரர்களுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இல்லை என்கிறார்கள். குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது முருங்கை.
சைவ உணவுக்காரர்களுக்கு சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவுத் துறை நிபுணர்கள், இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முருங்கையின் மூலம் கிடைக்கிற புரதமானது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதத்துக்கு இணையானது.
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இறைச்சியில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை. ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு எகிறும்.
குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுண்டு. முருங்கைப்பூவை பொடிமாஸ் மாதிரி செய்து சாப்பிடலாம். அரைவேக்காடு வேக வைத்த பாசிப்பருப்புடன், முருங்கைப்பூவையும் பொடியாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது குழந்தையின்மைப் பிரச்னை தீர உதவும். கர்ப்பப்பைகோளாறுகளை சரி செய்யும்.
ஒரே ஒரு கைப்பிடி பருப்பு சேர்த்து வைக்கிற தண்ணி சாம்பாரில், கொதிக்கும் போது நான்கைந்து கொத்து முருங்கைக்கீரையை அப்படியே கொத்தாகச் சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு அந்தக் கொத்தை அப்படியே எடுத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட,நுரையீரலில் கட்டிக் கொண்ட கபத்தை வெளியேற்றும். அடிக்கடி சளி, இருமல், அலர்ஜியால் அவதிப் படுவோருக்கும் இது அருமையான மருந்து.
பெண்கள்100 கிராம்
ஆண்கள்40 கிராம்
10 வயதுக்கு மேலான குழந்தைகள்50 கிராம்
முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் சியும், வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம். மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.
Friday, August 17, 2018
சாக்கடையில் கண்டுக்கப்பட்ட சுதந்திரத்தின் இன்றைய நிலை!
சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் வடிகாலில், பிறந்து இரண்டு மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. அந்தக் குழந்தையை துணை நடிகை கீதா என்பவர் மீட்டெடுத்தார். சுதந்திர தினத்தில் ஆண் குழந்தை மீட்டெடுக்கப்பட்டதால், `சுதந்திரம்' என்ற பெயரை கீதா சூட்டினார். பிறகு, அந்தக் குழந்தையை குளிப்பாட்டி, முதலுதவியும் அளித்தார். தற்போது `சுதந்திரம்' சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.
கீதாவின் செயலைப் பாராட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் கிப்ட் ஒன்றை வழங்கினார். இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் கீதா. அவரும் அவரின் போனும் எப்போதும் பிஸியாகவே இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் கீதாவிடம் பேசினோம்.
``சுதந்திரத்தை மீட்டு உயிரோடு காப்பாற்றியதற்காக என்னை எல்லோரும் பாராட்டுகிறார்கள். உண்மையில் நானும் சுதந்திரத்தைப் போல ஒரு அநாதைதான். சின்ன வயதில் என்னுடைய அம்மா இறந்துவிட்டார். அப்பாவின் கவனிப்பில்தான் வளர்க்கப்பட்டேன். ஆலந்தூரைச் சேர்ந்த ஒரு தம்பதி என்னை தத்தெடுத்து வளர்த்தனர். எனக்குத் திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இதனால் பெற்றோர் இல்லாமல் வாழ்வது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது. சுதந்திரத்தின் பெற்றோர் யார் என்று தெரியவில்லை. அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். ஒருவேளை சுதந்திரத்தின் பெற்றோர் குறித்த தகவலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவனை தத்தெடுக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன். சுதந்திரத்தை இந்தக் கையால்தான் மீட்டெடுத்தேன்.
கால்வாய்க் குழாயிலிருந்து அவனை மீட்டு குளிப்பாட்டியபோது எனக்குள் ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது. என்னை எல்லோரும் பாராட்டுகிறார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர், கிப்ட் கொடுத்து கௌரவித்துள்ளார். அந்த நிகழ்வை மறக்க முடியாது. சுதந்திரத்தின் நினைவுகளால் என்னால் சரிவர தூங்க முடியவில்லை. இதனால்தான் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவனைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறான். அவனின் கழுத்தில் நகக்கீறல்கள் உள்ளன. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அரசு பராமரிப்பில் `சுதந்திரம்' இருப்பதால், நிச்சயம் அவனின் எதிர்காலம் சிறப்பாக அமையும். அதற்காக இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்றார்.
Thursday, August 16, 2018
கலைஞர் சமாதிக்கு தினம் வரும் அந்த குழந்தை!நெகிழ்ச்சி!
கலைஞர் கருணாநிதி தன் முதல் குழந்தை என்று குறிப்பிடுவது முரசொலி இதழையே.தன் உயிருக்கு மேலாக முரசொலி பத்திரிகையை மதித்தார்.முரசொலி பத்திரிக்கை கையில் வைத்திருந்தால் தன் காரை நிறுத்தி அவரிடம் உரையாடிவிட்டு செல்லுமளவிற்கு முரசொலி அவர் உயிர்,உணர்வோடு கலந்தது.அவர் சமாதிக்கு தினமும் முரசொலி இதழ் வைக்கப்படுகிறது.இது பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது!
Tuesday, August 14, 2018
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் முழுமையான பட்டியல்
அ
அ. வைத்தியநாத ஐயர்
அஞ்சலி அம்மாள்
அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி
அப்பாஸ் அலி
அமீர் ஐதர் கான்
அரவிந்தர்
அருணா ஆசஃப் அலி
அழகு முத்துக்கோன்
அன்னி பெசண்ட்
அனந்த பத்மநாப நாடார்
அஷ்பகுல்லா கான்
ஆ
ஆ. நா. சிவராமன்
ஆச்சார்ய கிருபளானி
ஆர். உமாநாத்
இ
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்
இம்மானுவேல் சேகரன்
இராசேந்திர பிரசாத்
இராணி இலட்சுமிபாய்
உ
உசா மேத்தா
உத்தம் சிங்
உதயப்பெருமாள்
உபைதுல்லா
ஊ
ஊமைத்துரை
எ
எம். என். ராய்
எம். கே. மீரான்
எல். கே. துளசிராம்
எல். கே. பி. லகுமையா
என். ஆர். தியாகராசன்
என். எம். ஆர். சுப்பராமன்
என். எம். பெரேரா
என். சங்கரய்யா
என். ஜி. ராமசாமி
எஸ். என். சோமையாஜுலு
ஏ
ஏ. எஸ். கே.
ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே
ஒ
ஒண்டிவீரன்
க
க. இரா. ஜமதக்னி
கட்டபொம்மன்
கடலூர் அஞ்சலையம்மாள்
கண. முத்தையா
கமலா நேரு
கமலாதேவி சட்டோபாத்யாய்
கர்த்தார் சிங்
கருப்ப சேர்வை
கருமுத்து தியாகராசர்
காகா காலேல்கர்
கான் அப்துல் கப்பார் கான்
குயிலி (போராளி)
கே. எஸ். இராமசாமி கவுண்டர்
கே. சந்தானம்
கே. முத்தையா
கொகினேனி ரங்க நாயுகுலு
கோ. வேங்கடாசலபதி
கோபால கிருஷ்ண கோகலே
கோபிநாத் பர்தலை
கோவை அய்யாமுத்து
ச
ச. ராஜாபாதர்
சங்கு சுப்பிரமணியம்
சந்திரசேகர ஆசாத்
சரத் சந்திர போசு
சரோஜினி நாயுடு
சாரு மசூம்தார்
சி. ஆர். நரசிம்மன்
சி. சங்கரன் நாயர்
சித்தரஞ்சன் தாஸ்
சியாமா பிரசாத் முகர்ஜி
சிவராம் ராஜகுரு
சிற்றறைச் சிறை
சின்ன அண்ணாமலை
சின்ன மருது மகன் துரைச்சாமி
சுசேதா கிருபளானி
சுபாஷ் சந்திர போஸ்
சூரியா சென்
செண்பகராமன் பிள்ளை
ட
டி. என். தீர்த்தகிரி
டி. செங்கல்வராயன்
த
தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள்
தாதா அப்துல்லாஹ் கம்பெனி
தாதாபாய் நௌரோஜி
தாந்தியா தோபே
தாரா சிங் (செயற்பாட்டாளர்)
தாரா ராணி சிறீவசுதவா
தில்லையாடி வள்ளியம்மை
தீரன் சின்னமலை
தூந்தாஜி வாக்
தேவதாஸ் காந்தி
ந
நானா சாகிப்
நீலகண்ட பிரம்மச்சாரி
நீலமேகம் பிள்ளை
ப
பகத் சிங்
பதுகேஷ்வர் தத்
பர்கதுல்லா
பரலி சு. நெல்லையப்பர்
பழசி இராசா
பாகாஜதீன்
பால கங்காதர திலகர்
பாஷ்யம் என்கிற ஆர்யா
பி. எஸ். பி. பொன்னுசாமி
பி. எஸ். மணி
பி. சுந்தரய்யா
பிகாஜி காமா
பிபின் சந்திர பால்
பிர்சா முண்டா
பூபேந்திரநாத் தத்தர்
பூமேடை ராமையா
பூலித்தேவன்
பெரிய காலாடி
பெரோஸ் காந்தி
பேகம் அசரத் மகால்
பொ. திருகூடசுந்தரம்
பொட்டி சிறீராமுலு
பொன்னுசாமி நாடார்
ம
ம. சிங்காரவேலர்
மகாதேவ தேசாய்
மங்கள் பாண்டே
மதன் மோகன் மாளவியா
மதன் லால் டிங்கரா
மது லிமாயி
மயிலப்பன் சேர்வைகாரர்
மரகதம் சந்திரசேகர்
மருதநாயகம்
மருது பாண்டியர்
மறை. திருநாவுக்கரசு
மாயாண்டி பாரதி
மிர்துலா சாராபாய்
மீரா பென்
மீனாட்சிசுந்தரம்
முகம்மது இசுமாயில்
முத்து வடுகநாதர்
முத்துராமலிங்கத் தேவர்
மூவலூர் இராமாமிர்தம்
மைதிலி சரண் குப்த்
மோகன் குமாரமங்கலம்
மோகன்தாசு கரம்சந்த் காந்தி
ய
யாக்கூப் அசன் சேத்
யு. என். தேபர்
ர
ரா. கிருஷ்ணசாமி
ராணி அவந்திபாய்
ராணி சென்னம்மா
ராம் பிரசாத் பிசுமில்
ராம்தாஸ் காந்தி
ராமச்சந்திர நாயக்கர்
ராமாச்சாரி கே. வி
ராஜ் நாராயணன்
ராஷ் பிஹாரி போஸ்
ருக்மிணி லட்சுமிபதி
ல
லாலா லஜபதி ராய்
வ
வ. சுப்பையா
வ. வே. சுப்பிரமணியம்
வடிவு
வல்லபாய் பட்டேல்
வாஞ்சிநாதன்
வாண்டாயத் தேவன்
வி. கல்யாணம்
விருப்பாச்சி கோபால்
வினாயக் தாமோதர் சாவர்க்கர்
விஸ்வநாத தாஸ்
வீரன் சுந்தரலிங்கம்
வீரேந்திரநாத் சட்டோபாத்யாய
வெ. துரையனார்
வேலு நாச்சியார்
ஜ
ஜத்தீந்திர நாத் தாஸ்
ஜம்புத் தீவு பிரகடனம்
ஜல்காரிபாய்
ஜவகர்லால் நேரு
ஜார்ஜ் ஜோசப்
ஜானகி ஆதி நாகப்பன்
ஜி. இராமச்சந்திரன் (சமூக ஆர்வலர்)
ஜி. ஏ. வடிவேலு
ஜி. கே. சுந்தரம்
ஜெகசீவன்ராம்
ஜெயபிரகாஷ் நாராயண்
ஜெயில் சிங்
ஹ
ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்
ஹரி கிருஷ்ண கோனார்
ஹாஜி முகமது மெளலானா சாகிப்
ர்
கேசவ பலிராம் ஹெட்கேவர்
ஆ
மினூ மசானி
கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர்
ஜீவராஜ் மேத்தா
N
ஜி. ஏ. நடேசன்
சு
டி. ரங்காச்சாரி
வு
பட்டம் தாணு பிள்ளை
Thursday, August 9, 2018
GPF,TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
RATE OF
INTEREST
|
PERIOD
|
G.O.NO.
|
|
8.7%
|
01/04/2015
TO
|
G.O.No.129, DATED 27th April, 2015
|
|
8.1%
|
01/04/2016 TO30/06/2016
|
G.O.No.209,
DATED 15/07/2016
|
|
8.1%
|
1-07/2016 TO
30/09/2016
|
G.O.No.231,
DATED.09.08.2016
|
|
8.0%
|
1-10/2016 TO
31/12/2016
|
G.O.No.276, DATED.24.10.2016
|
|
8.0%
|
1-1/2017 TO
31/3/2017
|
G.O.No.35, DATED.15.02.2017
|
|
7.9%
|
01/04/2017
TO30/06/2017
|
G.O.No.102,
DATED.25.04.2017
|
|
7.8%
|
1-07/2017 TO
30/09/2017
|
G.O.No.227,
DATED.28.07.2017
|
|
7.8%
|
1-10/2017 TO
31/12/2017
|
G.O.No.320, Dated 27.10.2017
|
|
7.6%
|
1-1/2018 TO
31/3/2018
|
G.O.Ms.No.11,
Dated 10th
January
2018
|
|
7.6%
|
01/04/2018
TO30/06/2018
|
G.O.Ms.No.135,
Dated 23rd April 2018
|
|
7.6%
|
1-07/2018 TO
30/09/2018
|
G.O.Ms.No.252,
Dated 26th July 2018
|
|
















