18 வருடத்துக்கப்புறம் வருமானத்துக்குரிய சான்றிதழ்களை ஜெயலலிதா சமர்ப்பித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி இன்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெறும் 3 நிமிடங்களில் தீர்ப்பின் முக்கிய அம்சத்தை வாசித்துவிட்டு சென்றுவிட்டார்.
சரியாக காலை 11 மணிக்கு நீதிமன்றத்தின் அறை எண் 14க்குள் நுழைந்த நீதிபதி குமாரசாமி, தீர்ப்பை வாசிக்க தொடங்கிய உடன், "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.
தொடர்ந்து தீர்ப்பை வாசித்த அவர், "சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.
இதனிடையே, வருமானத்துக்குரிய சான்றிதழ்களை ஜெயலலிதா சமர்ப்பித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று அவரது வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார்.







0 comments:
Post a Comment