உலகக் கோப்பை கால்பந்து ஹீரோ யார்?கடும் போட்டி
தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் ஹீரோவாக நிலை நிற்கப் போகிறவர் யார் ? என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்கள் மட்டுமின்றி உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.எதிர் பார்க்கப்பட்டவர்களில் இங்கிலாந்தின் ரூனே' வும், போர்ச்சுகல்லின் ரொனால்டோ' வும் சொதப்பியதொடு அவர்கள் அணியும் வெளியேறிவிட்டது.மீதமுள்ளவர் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி மட்டுமே.
மெஸ்ஸி எதிர்பார்ப்பை ஈடு செய்ததோடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.ரசிகர்கள் மட்டுமின்றி கால்பந்து ஜாம்பவான்கள் பாராட்டும்படி அவர் அடித்துள்ள கோல்கள் அமைந்துள்ளன.இன்றுவரை 4 கோல்கள் அடித்து டாப் ஸ்கோரர் ஆகவும் உள்ளார்.மேலும் , இவர் அடித்த கோல்களே அணிக்கு வெற்றி தேடிதந்துள்ளன. மெஸ்ஸி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் நாக் அவுட் சுற்றை தாண்டினாலே மெஸ்ஸி ஹீரோ ஆகிவிடுவார் என்பது உறுதி.












