அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

Tuesday, February 18, 2014

முருகன், சாந்தன், பேரறிவாளன்தூக்கு தண்டனை ரத்து!

முருகன், சாந்தன், பேரறிவாளன்தூக்கு தண்டனை ரத்து!


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட தகவல் வேலூர் ஜெயிலில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோக்கு தெரிவிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பை கேட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று இரவு முதலே அவர்கள் தீர்ப்பு குறித்து பதட்டத்துடன் இருந்துள்ளனர். மேலும் ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பேரறிவாளன் நீண்ட நேரம் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. தீர்ப்பு குறித்து தகவலறிந்த சக கைதிகள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வேலூர் பெண்கள் ஜெயிலில் உள்ள நளினி தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்ததுடன் ஆனந்த் கண்ணீர் விட்டுள்ளார். அவர் பெண்கள் ஜெயிலில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று நீண்ட நேரம் சாமி தரிசனம் செய்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் ஜெயிலில் உள்ள முருகனை அவரது தாயார் சோமணி, நளினியின் தாயார் நர்சு பத்மா ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.
Share:

0 comments:

Post a Comment

Definition List

Unordered List

Support