கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி பள்ளி மாணவிகள் நேற்று ஆன்லைன் மூலம் ஆசிரியர் தின விழாவை உற்சாகமாக கொண்டாடினர். தங்களது வீடுகளில் இருந்தவாறே பாட்டுப்பாடி, நடனமாடி ஆசிரியைகளுக்கு வாழ்த்து கூறினர்.
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Sunday, September 6, 2020
Monday, April 13, 2020
Thursday, April 2, 2020
கபசுர குடி நீர் வைரசை அழிக்குமா? ஆய்வு முடிவுகள் Kapasura drinking water destroy the virus?Study results
கபசுர குடி நீர் வைரசை அழிக்குமா? ஆய்வு முடிவுகள்
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள நீண்ட காலம் மக்கள் பயன்படுத்தி வரும் கபசுர குடி நீர்
இயற்கை வைத்தியம் குறித்து கோவை KMCH கல்லூரி மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை அளித்துள்ளனர்.அம்முடிவுகளை
INTERNATIONAL JOURNAL OF CURRENT ADVANCED RESEARCH அங்கீகரித்துள்ளது.அந்த ஆராய்ச்சியில் கபசுர குடி நீர் பன்றி காய்ச்சல் மருந்தாக மற்றும் ,ஆண்டி வைரல் ஆகவும்,ஆண்டி பையாடிக் ஆகவும் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட கபசுர குடி நீர் பயன்படுத்தலாம் என மக்களிடையே பரவலாக கருத்து ஏற்பட்டுள்ளது.எனினும் இது குறித்து அரசு அங்கீகரமாக எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை.டெங்கு காய்ச்சல் போது நில வேம்பு குடி நீரை பரிந்துரைத்தது.
Wednesday, March 25, 2020
நூறாண்டுக்கு ஒரு முறை பேரழிவு நோய் -அதிர்ச்சி தகவல்
Tuesday, March 24, 2020
நள்ளிரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு.-பிரதமர் மோடி.
21 நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கும். 3 வாரங்களுக்கு 144 தடை அவசியம்.
ஒவ்வொரு கிரமங்களும் கடைக்கிடிக்க படும்.
மிக கடுமையான முறையில் கடைபிடிக்கபடும்.
கட்டுபாடு இல்லாவிட்டால் உங்களை நீங்களே அழித்து கொள்வதற்க்கு சமம்
21 நாட்களுக்குள் கடைபிடிக்காவிட்டால் நாடு 21 ஆண்டுகள் பின் நோக்கி செல்லும்.
அடுத்த 21 நாட்கள் நமக்கு மிகவும் முக்கியமானது.
பிரதமர் மோடி.
Thursday, March 5, 2020
Coronavirus: கொரோனா வைரஸ் - தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
- கொரோனா வைரஸ் என்றால் என்ன?
- இது ஒரு நுண் உயிரி, உயிர்கொல்லி நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. கொரோனா வைரஸ் பாதித்தால் சாதாரண சளி முதல் சார்ஸ், மெர்ஸ், நிமோனியா போன்ற தீவிர நோய்கள் ஏற்படும். இறுதியில் உயிரிழப்பு ஏற்படும்.
- கொரோனா
வைரஸ் நோயின் அறிகுறிகள்
இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன் இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்படும். தொண்டை வீங்குவதும், உணவை விழுங்குவதில் சிரமமும் ஏற்படும். சில நேரங்களில் நிமோனியா போன்ற விஷக்காய்ச்சல் ஏற்படக் கூடும். பிராங்கைட்டிஸ் (bronchitis) எனப்படும் நுரையீரல் நோயும் ஏற்படக்கூடும். ஒட்டு மொத்த சுவாசப் பாதையும் (respiratory track) பாதிக்கப்பட்டு, SARS (Severe Acute Respiratory Syndrome) எனப்படும் உயிரைப் பறிக்கும் மூச்சுத் திணறல் நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
பாதிக்கப்பட்ட நபரின் இருமல் அல்லது தும்மல் மூலம் பரவும், பாதிக்கப்பட்ட நபர்களை தொடுவதின் மூலமும் பரவும் தன்மை கொண்டது. ஏனவே, மருத்துவமனையிலும் அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு முறை எதையேனும் உண்பதற்கு முன்பு கைகளை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். டெட்டால், சாவ்லன் போன்ற கிருமி நாசினி சோப்புகள் மற்ற சோப்புகளை விட ஓரளவு மேலானவை. கை, கால் விரல் நகங்கள் நன்றாக வெட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தரங்க சுத்தம் மற்றும் உணவுச் சுத்தம் (personal and food hygiene) கறாராகப் பேணப்பட வேண்டும். நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரையே அருந்த வேண்டும். இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை முழுமையாக வேகவைத்த பின்னரே உண்ணுமாறு WHO .கூறுகிறது. எனவே முக்கால் வேக்காட்டு இறைச்சியை உண்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக அரைவேக்காட்டு (Half boiled) முட்டையை உண்ண வேண்டாம். சீன உணவகங்களுக்குச்சென்று (Chinese restaurants) சீன உணவுகளை உண்பதைப்பாதுகாப்புக் கருதித் தவிர்க்கலாம்.
சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா வைரஸின் நுண்ணிய படங்களை நேற்று முதன்முதலாக வெளியிட்டுள்ளனர். வுஹான் நகரில் இரண்டு நோயாளிகளிடம் இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், இந்தப் புதிய கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் விரைவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். அறிகுறிகள் தெரியும் முன்னே தொற்று இருக்கிறதா என்பதை இனி சோதனை செய்துபார்த்துவிடலாம் என மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்பித்த 42 நாட்களுக்கு பிறகு மாடர்னா என்ற நிறுவனம் எம்.ஆர்.என்.ஏ -1273 என்ற தடுப்பூசி மருந்தை கண்டறிந்து உள்ளார். இது குறித்த ஆய்வு மேற்கொண்டு அடுத்த மாதம் முதல் ஆரோக்கியமான-தன்னார்வ ஆய்வில் நிறுவனம் மற்றும் தேசிய சுகாதார நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறதா என்பதை தீர்மானிக்க இந்த இரண்டு அமைப்புகளும் சேர்ந்து செயல்படும். இதன் மூலம் நோயாளிகளை காக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். எம. ஆர். என். ஏ என்பது ஒரு மெசஞ்சர் செயற்கை இழை அம்சம். இது நம் உடலில் அந்த வைரஸூக்கு எதிராக ஆன்டி பாடிகளை உருவாக்குகிறது. ஆனால் 2010 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தான் கண்டுபிடித்த எந்த எம். ஆர். என். ஏ மருந்துக்கும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதலை இன்னும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாடர்னாவைப் போலவே, க்யூர்வாக் என்ற நிறுவனமும் மனிதனால் உருவாக்கப்பட்ட எம்.ஆர்.என்.ஏவைப் பயன்படுத்தி புரதங்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த மருந்து மனிதர்களின் மீது செலுத்தப்பட்டு சோதனை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது CEPI கம்பெனியுடன் இணைந்து சீக்கிரமே நிறைய தடுப்பூசி மருந்துகளை தங்களால் உற்பத்தி செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒருவரான கிளாக்சோஸ்மித்க்லைன், அதன் தொழில்நுட்பத்தை ஒரு சீன பயோடெக் நிறுவனத்திற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை கடனாக கொடுக்க கடந்த மாதம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் தனியார் நிறுவனமான க்ளோவர் பயோஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு இதை வழங்குகிறது. இதன் மூலம் ஒரு நோயெதிப்பு சக்தியை தூண்டும் புரதங்களை உள்ளே செலுத்துவதன் மூலம் அந்த வைரஸை எதிர்த்து போரிட முடியும் என்கிறார்கள். இது மனித சோதனைக்கு கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து இன்னும் அந்த நிறுவனம் எதுவும் கூறவில்லை.
இந்த இன்னோவியோ நிறுவனமும் டி. என். ஏ வை தடுப்பூசி மருந்துகளாக மாற்ற நாலு வருடமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் கண்டிப்பாக கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி மருந்துகளை கண்டறிய முடியும் என நம்புகின்றனர். CEPI நிறுவனத்தின் நிதி உதிவுயுடன் இன்னோவியோ நிறுவனம் சேர்ந்து ஒரு டி.என்.ஏ தடுப்பூசியைக் கொண்டு வந்துள்ளது, இந்த மருந்து பாதுகாப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கி நோயாளிகளை நோய்த்தொற்றிலிருந்து தடுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த நிறுவனம் சீன உற்பத்தியாளரான பெய்ஜிங் அட்வாசின் பயோடெக்னாலஜியுடன் கூட்டு சேர்ந்துள்ளது ஐ.என்.ஓ -4800 என்ற தடுப்பூசி மருந்துடன் முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் பாதியில் இது மருத்துவ பரிசோதனைக்கு முன்னேறி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பயோஜென் மூத்த ஜார்ஜ் ஸ்காங்கோஸ் இந்த கொரோனா வைரஸ் கிளர்ச்சிக்கு எதிராக BIO என்ற வர்த்தக குழுவையும் தன்னுடன் ஒருங்கிணைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இன்னும் கட்டுக்குள் அடங்காத கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக ஆய்வுகளும் மருந்து நிறுவனங்களும் தங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.




















