அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Saturday, November 30, 2013

"இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த,இந்திய அரசு முழு முயற்சிகளும் எடுத்தது". இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்


இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த,இந்திய  அரசு முழு முயற்சிகளும் எடுத்தது. ஆனால், விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் அதற்கு ஒத்து வராததால், போரை நிறுத்த முடியாமல், இனப்படுகொலை நடந்தது,'' என, இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
'இலங்கை தமிழர் வாழ்வுரிமையும்,
இந்திய அரசின் நிலையும்' என்ற கருத்தரங்கம் சென்னையில், நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது.
இதில், சிதம்பரம் பேசியதாவது:
இலங்கை, இறையாண்மை கொண்ட ஒரு நாடு. அந்நாட்டை பிரித்து, தனிநாட்டை உருவாக்கிக் கொடுக்க முடியாது. இந்தியாவில், காஷ்மீரையும், வடகிழக்கு மாநிலங்களில், நாகா மற்றும் மிசோ நாடுகளையும் கேட்டு போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு, நாட்டை பிரித்துக் கொடுத்துவிட முடியுமா? அதுபோல் தான், இறையாண்மை கொண்ட இலங்கையைப் பிரித்து, தனிநாடு உருவாக்க முடியாது.
ஆனால், 'இலங்கை வாழ் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தர வேண்டும்' என, ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம்
உருவாக்கப்பட்டது.
இதன்படி, தமிழை, இலங்கையின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, ஒரே மாகாணத்தை உருவாக்க வேண்டும்.
அரசியல் மற்றும் பிற உரிமைகளை,
தமிழர்களுக்கு அளிக்க வேண்டும்.
இதற்கு, இலங்கையின் அரசியல் சாசன சட்டத்தில், 13வது திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும். இதையேற்று, 13வது அரசியல் அமைப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், அதை அமல் செய்ய, இலங்கை அரசு முரண்டு பிடிக்கிறது.
இதற்கிடையே, இலங்கையில், இறுதிகட்டப் போர் நடந்த, 2009ல், இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், மத்திய அரசு, வெளிநாட்டில் நடக்கும் போர் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது.
இதனால், பெரும் மன வருத்தம் தரக்கூடிய, இனப் படுகொலை நடந்தேறியது.
இதைப் பற்றி இனி பேசிப் பயனில்லை. இருக்கக் கூடிய, இலங்கைத் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டியதே நமது கடமை. இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில், இந்திய பிரதமர் பங்கேற்காமல் இருந்தது, இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் இலங்கைக்கு செல்லாமல்,
வெளியுறவு அமைச்சரை காமன்வெல்த் மாநாட்டுக்கு அனுப்பியது தான், விவேகமான செயல்.
இதன்மூலம் தான், இலங்கைப் பிரச்னையில், தொடர்ந்து தலையிட்டு, தமிழர்கள் நலனை பாதுகாக்க முடியும். நாம் முழுமையாக காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்து இருந்தால், இலங்கையுடன் தொடர்ந்து உறவு கொள்ளமுடியாது. நமக்கு, விசா கொடுக்க, இலங்கை அரசு மறுக்க முடியும்.
விரைவில் இந்திய பிரதமர், யாழ்பாணத்துக்கு செல்வார். அங்கிருக்கும் முதல்வர் விக்கேனஸ்வரனுடன் ஆலோசித்து, தமிழர்களின் நலனை மேம்படுத்துவார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும்,
13வது அரசியல் அமைப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு சர்வதேச
விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். போரில் இடம்பெயர்ந்த
தமிழர்களை மறு குடியமர்வு செய்யவேண்டும்.
இதிலிருந்து, எந்த காலகட்டத்திலும்
பின்வாங்க மாட்டோம்.
இவ்வாறு, சிதம்பரம் பேசினார்.
Share:

Monday, November 18, 2013

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும்:இலங்கைக்கு சீனா திடீர் வலியுறுத்தல்



மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று இலங்கை அரசை அதன் நட்பு நாடான சீனா திடீரென்று வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சீனா உறுப்பு நாடாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தெடுக்கப்பட்டுள்ளதால் சீனாவின் நிலைப்பாடு மாறியுள்ளதாக தெரிகிறது.

"இலங்கைப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சர்வதேச விசாரணைக்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கின் கெங் கூறியதாவது:

மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மற்ற நாடுகள் ஒருங்கிணைந்து உதவ வேண்டும்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது குறித்து அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டின்போது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச அளவில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒற்றுமையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து என்று கின் கெங் கூறினார்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கு தேவையான நவீன கட்டமைப்பு வசதிகளையும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் சீனா நிறைவேற்றி தந்தது குறிப்பிடத்தக்கது.
Share:

Friday, November 1, 2013

கல்வியை தனியாருக்கு தாரை வார்க்காதே!மருத்துவர் ராமதாசு அறிக்கை.

கல்வியை தனியாருக்கு தாரை வார்க்காதே!மருத்துவர் ராமதாசு அறிக்கை.





Share:

Definition List

Unordered List

Support